Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
எல்.பி.எல் 2026: சம்பியன் பட்டத்துக்கான பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் இன்று ஆரம்பம்

Aug 6, 2026 - 03:54 PM

எல்.பி.எல் 2026: சம்பியன் பட்டத்துக்கான பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் இன்று ஆரம்பம்
Mobitel Inner 1278

சாதனை இன்னிங்ஸ்கள், ஆட்டத்தை மாற்றிய பந்துவீச்சுகள், புள்ளிகள் பட்டியலில் மாற்றங்கள் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பரபரப்பான கடைசி நாள் என பல்வேறு திருப்புமுனைகளுடன் லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2026 தொடரின் லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிப் போட்டியை நோக்கிய பிளே-ஆஃப் சுற்று இன்று (05) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகுகின்றன. 

புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த ஜெப்னா கிங்ஸ் அணியும், இரண்டாம் இடம் பிடித்த கோல் கெலண்ட்ஸ் அணியும் தகுதிச்சுற்று 1 (Qualifier 1) போட்டியில் மோதவுள்ளன. அதனைத் தொடர்ந்து, எலிமினேட்டர் Eliminator) போட்டியில் கலம்போ கெப்ஸ் மற்றும் கெண்டி றோயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இறுதிப்போட்டி உட்பட அனைத்து பிளே-ஆஃப் போட்டிகளும் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளன. 

லீக் சுற்றில் 8 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஜெப்னா கிங்ஸ் அணி, தனது வலுவான பந்துவீச்சு வரிசையை முதன்மையாகக் கொண்டு களமிறங்குகிறது. இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களாக லிசாட் வில்லியம்ஸ் மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் திகழ்கின்றனர். மேலும், சகிப் அல் ஹசன் மற்றும் டில்ஷான் மதுசங்க ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். துடுப்பாட்டத்தில் கமில் மிஷார, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தவ்ஹித் ஹிர்டோய் ஆகியோர் முக்கிய தூண்களாக உள்ளனர். 

மறுபுறம், 8 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பதிவு செய்து இரண்டாம் இடத்தை உறுதி செய்த கோல் கெலண்ட்ஸ் அணி, அணித்தலைவர் தசுன் ஷானகவின் தலைமையிலும் சஹான் ஆராச்சிமே, சரித் அசலங்க மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோரின் சகலதுறை திறமையினாலும் பலமிக்க அணியாக திகழ்கிறது. பந்துவீச்சில் எஷான் மாலிங்க, அகிஃப் ஜாவேத் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் முக்கிய வீரர்களாக உள்ளனர். 

இதனிடையே, இரண்டாவது போட்டியில் மோதும் கொழும்பு அணி, கமிந்து மெண்டிஸ் தலைமையில் களம் காண்கிறது. ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோர் அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்து வருகின்றனர். கெண்டி றோயல்ஸ் அணியைப் பொறுத்தவரை, இத்தொடரின் அதிக ஓட்டங்களைக் குவித்ததுடன் எல்.பி.எல் வரலாற்றிலேயே அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களைக் (132) குவித்து சாதனை படைத்த லஹிரு உதாரவின் துடுப்பாட்டம் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. அணித்தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸின் அனுபவமும், வனிந்து ஹசரங்க மற்றும் மொயின் அலி போன்ற வீரர்களின் பங்களிப்பும் அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது. 

தம்புள்ளை அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, கெண்டி றோயல்ஸ் அணி தனது பிளே-ஆஃப் வாய்ப்பை இறுதி நேரத்தில் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. எனவே, நான்கு முன்னணி அணிகளும் இம்முறை சம்பியன் பட்டத்தை வெல்ல கடும் போட்டி போடுவதால், எல்.பி.எல் 2026 தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

Mobitel 1278