Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
இலங்கையின் AI சிறப்பை கொண்டாடும் வகையில் தேசிய AI விருதுகள் 2026 க்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Aug 6, 2026 - 04:08 PM

இலங்கையின் AI சிறப்பை கொண்டாடும் வகையில் தேசிய AI விருதுகள் 2026 க்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
Mobitel Inner 1278

இலங்கையின் உள்ளூர் தொழிற்துறைகள் மற்றும் சமூகங்களின் சாத்தியக்கூறுகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி, அவற்றை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் ஒரு சக்திவாய்ந்த மாற்றத்துக்கான கருவியாக AI மிக வேகமாக உருவெடுத்து வருகிறது. இலங்கை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் முன்னோடி முயற்சியில், SLT-MOBITEL நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய AI விருதுகள் 2026, இலங்கை AI வாரத்தின் மிகவும் முக்கிய சிறப்பம்சமாக அமையவுள்ளதுடன், AI இன் எதிர்காலத்தை வடிவமைக்கும் தலைவர்களையும் புத்தாக்குனர்களையும் ஒன்றுசேர்க்கவுள்ளது. 

2026 அக்டோபர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த விருது வழங்கும் விழா, தொழிற்துறை, கல்வித்துறை, ஆரம்பநிலை நிறுவனங்கள் மற்றும் அரச துறை ஆகியவற்றில் AI ஊடாக எட்டப்பட்ட மிகச்சிறந்த உள்ளூர் சாதனைகளை வெளிச்சம்போட்டுக் காட்டும். மேலும், இந்த விருதுகள் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதுடன், AI அறிமுகம் மற்றும் சிறப்பம்சங்களுக்கான தேசிய அளவுகோல்களையும் கௌரவிக்கவுள்ளன. 

மேலும், தேசிய AI விருது விழா, இந்த மாற்றத்தை வழிநடத்தும் சிறந்த சிந்தனையாளர்கள், குழுக்கள் மற்றும் யோசனைகளைக் கொண்டாடுவதுடன், தொழிற்துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி, சாத்தியக்கூறுகளுக்கு புதிய இலக்கணம் வகுத்து, தேசிய மட்டத்திலான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கவுள்ளது. 

தேசிய AI முன்னோடி விருதுகள் (National AI Trailblazer Awards), தொழிற்துறை மற்றும் துறைசார் சிறப்பு விருதுகள் (Industry & Sector Excellence Awards), புத்தாக்கம் மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட விருதுகள் (Innovation & Future-Focused Awards) மற்றும் ஆண்டின் சிறந்த AI உள்ளடக்க உருவாக்குநர்கள் (AI Content Creators of the Year) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

AI துறையிலான உயர்மட்ட தாக்கம் மற்றும் தலைமையை அங்கீகரிக்கும் வகையில், தேசிய AI சிறப்பு விருது (National AI Excellence Award), தேசிய AI தலைமைத்துவ சிறப்பு விருது (National AI Leadership Excellence Award), தேசிய AI தாக்கச் சிறப்பு விருது (National AI Impact Excellence Award) மற்றும் தேசிய AI ஏற்றுமதிச் சிறப்பு விருது (National AI Export Excellence Award) ஆகிய உயரிய விருதுகள் இதில் உள்ளடங்கியுள்ளன. 

முக்கிய துறைகளிலான AI மாற்றங்களைக் கொண்டாடும் வகையில், தொழிற்துறை புத்தாக்க விருதுகளின் (Industry Innovation Awards) கீழ் விவசாயம், உற்பத்தி மற்றும் தொழிற்துறை 5.0, வங்கி, நிதி மற்றும் காப்பீடு, கல்வி, சுகாதாரம் மற்றும் உயிர் விஞ்ஞானம் மற்றும் ஊடகம் ஆகிய துறைகளில் AI இன் முன்னோடிப் பயன்பாடுகள் கௌரவிக்கப்படவுள்ளன அடுத்த தலைமுறை AI புத்தாக்கங்களை அங்கீகரிக்கும் வகையில், புத்தாக்கம் மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட விருதுகள் (Innovation & Future-Focused Awards) என்ற பிரிவின் கீழ், சிறந்த AI ஆரம்பநிலை/MSME புத்தாக்கம் (Best AI Startup/MSME Innovation), பல்கலைக்கழக AI புத்தாக்கம் (University AI Innovation), சிறந்த ஏஜென்டிக் AI தீர்வு (Best Agentic AI Solution), AI துறையிலான பெண் தலைமைத்துவம் (Women in AI Leadership) மற்றும் சிறந்த சிங்கள/தமிழ் AI மற்றும் உள்ளூர்மயமாக்கல் புத்தாக்கம் (Best Sinhala/Tamil AI & Localisation Innovation) ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன. 

AI தொழினுட்பத்தின் வழியிலான படைப்பாற்றல் மற்றும் அறிவுப் பகிர்வின் அதிகரித்து வரும் செல்வாக்கை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டின் சிறந்த AI உள்ளடக்க உருவாக்குநர்கள் (AI Content Creators of the Year - தனிநபர்/குழு) விருது, AI தொழினுட்பத்தைப் பயன்படுத்தி செல்வாக்குமிக்க, பொறுப்புணர்வுமிக்க மற்றும் புத்தாக்கமான உள்ளடக்கங்களை உருவாக்கும் சிறந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களைக் கௌரவிக்கவுள்ளது. இதன்கீழ், AI கல்விச் சார் உள்ளடக்க உருவாக்குநர் விருது (AI Educational Content Creator Award), AI வீடியோ மற்றும் கதைகூறல் உள்ளடக்க உருவாக்குநர் விருது (AI Video & Storytelling Creator Award), AI சமூகத் தாக்க உள்ளடக்க உருவாக்குநர் விருது (AI Social Impact Content Creator Award), AI எதிர்காலத் தொழினுட்ப உள்ளடக்க உருவாக்குநர் விருது (AI FutureTech Content Creator Award) மற்றும் AI கலாச்சார பாரம்பரியம் மற்றும் சுற்றுலா உள்ளடக்க விருது (AI Cultural Heritage & Tourism Content Award) ஆகிய ஐந்து துறைகளின் கீழ் இவ்விருதுகள் வழங்கப்படும். 

இலங்கையின் AI பயணத்தில் இணைந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பங்களை www.aiexpo.lk/ai-awards என்ற இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் திகதி 2026 ஆகஸ்ட் 15 ஆகும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

Mobitel 1278