Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் SLT-MOBITEL ஆகியன இணைந்து ‘AI Amplified’ எனும் தொனிப்பொருளில் ‘Sri Lanka AI Week 2026’ அறிமுகம்

Aug 6, 2026 - 04:15 PM

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் SLT-MOBITEL ஆகியன இணைந்து ‘AI Amplified’ எனும் தொனிப்பொருளில் ‘Sri Lanka AI Week 2026’ அறிமுகம்
Mobitel Inner 1278

இம் முதன்மை நிகழ்வு, இலங்கையின் AI சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தும் AI தலைவர்கள் இரவு, AI மாநாடு, AI கண்காட்சி மற்றும் தேசிய AI விருதுகள் ஆகிய நான்கு ஈர்க்கக்கூடிய நிகழ்வுகளைக் கொண்டிருக்கும் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்ட இலங்கையின் முதலாவது தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாட்டின் தொடர்ச்சியாக, நாட்டின் செயற்கை நுண்ணறிவு (AI) இலக்குகளை அளவிடக்கூடிய தாக்கமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ‘Sri Lanka AI Week 2026’ எனும் செயற்திட்டத்தை இலங்கை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்பத் தீர்வுகளின் வழங்குனரான SLT-MOBITEL ஆகியன இணைந்து அறிவித்துள்ளன. சிந்தனையைத் தூண்டும் கலந்துரையாடல்கள், அதிநவீன AI புத்தாக்கங்களின் காட்சிப்படுத்தல்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், வணிகங்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆரம்பநிலை நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாக, ஒரு செழிப்பான AI சூழமைப்பின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதை Sri Lanka AI Week 2026 நோக்கமாகக் கொண்டுள்ளது. 

2026 செப்டெம்பர் 28 முதல் ஒக்டோபர் 4 வரை கொழும்பில் பல இடங்களில் நடைபெறும் ‘Sri Lanka AI Week 2026’, நான்கு முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது. உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உயர் மட்ட நிர்வாகிகளுக்கான பிரத்தியேக தொடர்பாடல் விருந்துபசாரமான AI தலைவர்கள் இரவு மற்றும் AI கொள்கை, நிறுவன மாற்றம் மற்றும் வளர்ந்து வரும் தொழினுட்பங்கள் குறித்த முக்கிய உரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் பயிலரங்குகளைக் கொண்ட இரு நாள் அமர்வான AI மாநாடு ஆகியன இதில் அடங்கும். வணிகங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ள பல பிரிவுகளைக் கொண்ட AI கண்காட்சி, முக்கிய துறைகளை உள்ளடக்கிய உறுதியான AI தீர்வுகளைக் காட்சிப்படுத்தும். 

மேலும், நிறுவனங்கள், ஆரம்பநிலை நிறுவனங்கள், கல்வித்துறை மற்றும் அரச துறை ஆகியவற்றின் மத்தியிலான AI சிறப்பம்சங்களை அங்கீகரிக்கும் வகையில், வழங்கப்படவுள்ள தேசிய AI விருதுகள், தொழிற்துறை சிறப்பு, புத்தாக்கம் மற்றும் எதிர்காலம், மற்றும் உள்ளடக்கத்திற்கான AI ஆகிய நான்கு விருதுப் பிரிவுகளின் கீழ் 15க்கும் மேற்பட்ட துறைகளை உள்ளடக்கியுள்ளது. இலங்கையில் நடைமுறை ரீதியிலான AI தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன. 

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதில் AI தொழினுட்பத்தின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர் மாநாடு, விரிவுபடுத்தப்பட்ட தேசிய அளவிலான முன்முயற்சியுடன் இரண்டாவது ஆண்டாகவும் இந்நிகழ்வை நடத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. மேலும், முதலாவது பதிப்பில் இருந்து எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த இக்கலந்துரையாடல்கள், ‘Sri Lanka AI Week 2026’ எவ்வாறு AI அறிமுகத்தை மேலும் விரைவுபடுத்தும், ஒத்துழைப்பை மேம்படுத்தும் மற்றும் நாட்டின் AI இலக்குகளை மெய்யான மற்றும் அளவிடக்கூடிய முடிவுகளாக மாற்றும் என்பதையும் சுட்டிக்காட்டின. 

இந்நிகழ்வில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் திரு.வருண ஸ்ரீ தனபால, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான ஜனாதிபதியின் பிரதம ஆலோசகரும் GovTech Sri Lanka நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, SLT குழுமத்தின் தலைவர் கலாநிதி மோதிலால் டி சில்வா மற்றும் SLT-MOBITELஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு,ரியாஸ் ரஷீத் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் SLT-MOBITELஇன் சிரேஷ்ட அதிகாரிகளும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். AI ஏற்றுக்கொள்ளலை விரைவுபடுத்துவதற்கும் புதுமைகளை வளர்ப்பதற்கும் Sri Lanka AI Week 2026 இன் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கே, SLT-MOBITELஆல் இரண்டு புதிய AI- உந்தப்பட்ட முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் முதலாவது, SMART AI. இது தெற்காசியாவின் முதல் AI tokenisation தளம் ஆகும். வாடிக்கையாளர்கள் தங்கள் SLT-MOBITEL இணைப்பு மூலம் நேரடியாக AI token creditகளை வாங்க உதவும், இது முன்னணி AI கருவிகளை எளிதாகவும், நியாய விலையிலும், தடையின்றியும் அணுக வழிவகுக்கின்றது. SMART AI மூலம், SLT-MOBITEL ஆனது AIக்கான அணுகலை அனைவருக்கும் பரவலாக்குதல் மற்றும் கற்றல், கண்டுபிடிப்பு, உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சிக்கு AI ஐப் பயன்படுத்த மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர், படைப்பாளிகள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்த முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், இலங்கையின் தேசிய AI ஈடுபாட்டுத் தளமான AI Hubஐ SLT- MOBITEL பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. ஒரே, ஒழுங்குபடுத்தப்பட்ட டிஜிட்டல் சூழலமைப்பின் ஊடாகக் கல்வி பயில்வோர், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், தொழில்துறையினர் மற்றும் அரசாங்கத் தரப்பினரை ஒன்றிணைத்து, நாட்டின் AI மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வகையில் AI Hub வடிவமைக்கப்பட்டுள்ளது. AI Hub, AI கற்றல் மற்றும் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி ஒத்துழைப்பு, தொழில் வாய்ப்புகள், புத்தாக்கச் சவால்கள், AI வளங்கள், தொழில்துறைச் செய்திகள் மற்றும் பாதுகாப்பான தரவுப் பரிமாற்றச் சந்தை ஆகியவற்றை வழங்குகிறது. இதன் மூலம், பயனர்கள் கற்றுக்கொள்ளவும், புத்தாக்கங்களை முன்னெடுக்கவும், ஒத்துழைக்கவும், நிஜ உலகச் சவால்களுக்குத் தீர்வுகாண AI ஐப் பயன்படுத்தவும் முடிவதுடன், தேசிய ரீதியில் AI திறனாளர்களை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான வாய்ப்பையும், சிறந்த ஆராய்ச்சிக்கான சூழலையும், தரவுசார் புத்தாக்கத்தையும் வளர்க்கிறது. செயற்பாட்டில் உள்ள ஒரு நேரடி தளமாக, AI Hub, இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்தும் வகையில், துடிப்பானதும் நிலைபேறானதுமான AI சூழலமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக அமைந்துள்ளது. 

AIஇன் பொறுப்பான பயன்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிறுவர் நட்புறவான இணையத்தின் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் இந் நிகழ்வு எடுத்துரைத்தது. AI மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மகத்தான வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், சிறுவர்களுக்கான பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தை உறுதிசெய்வது பகிரப்பட்ட பொறுப்பாக உள்ளது. ‘AI Amplified’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ‘Sri Lanka AI Week 2026’, தேசிய முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதிலும், இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் அரசாங்கத்தின் நம்பகமான பங்காளராக SLT-MOBITEL ஆற்றிவரும் பங்கை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில் AI இன் முழுமையான ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாட்டில் அனைவரையும் உள்ளடக்கியதும் நிலைபேறானதுமான வளர்ச்சியை முன்னெடுப்பதற்காக, தொழில்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் நிறுவனம் ஆதரவளித்து வருகிறது. 

‘Sri Lanka AI Week 2026’ ஒரு நிகழ்வாக மட்டுப்படுத்தப்படாமல், தொழில்துறை மற்றும் வர்த்தகத் தலைவர்கள், அரசாங்க மற்றும் கொள்கைசார் பங்குதாரர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்கள், தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒரே தேசிய தளத்தில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, கூட்டாண்மைகளை உருவாக்கி, தொழில்துறை மாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கான ஒரு தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, AI ஏற்படுத்தும் தாக்கத்தை பொதுமக்கள் நேரடியாகக் காணும் வாய்ப்பையும் இது வழங்குகிறது. இதன் மூலம், இலங்கையின் எதிர்காலம் AI ஆல் மாற்றப்படாது; மாறாக, AI இன் மூலம் மேலும் வலுப்பெறும் என்ற தேசிய ரீதியிலான வலுவான செய்தியை இது வெளிப்படுத்துகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

Mobitel 1278