Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
Autobahn 3.0 சிறப்புத் திறன் விருதுகளில் பங்குதாரர் வலையமைப்பின் வலிமையை மேலும் வலுப்படுத்திய சியெட் களனி

Aug 6, 2026 - 04:21 PM

 Autobahn 3.0 சிறப்புத் திறன் விருதுகளில் பங்குதாரர் வலையமைப்பின் வலிமையை மேலும் வலுப்படுத்திய சியெட் களனி
Mobitel Inner 1278

சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) , நாடு முழுவதும் பரந்துள்ள தனது பங்குதாரர் வலையமைப்பின் வலிமை, மனஉறுதி மற்றும் வெற்றியைப் பாராட்டும் வகையில், பங்குதாரர் சிறப்பு விருதுகள் 2026 (Partner Excellence Awards 2026) விருது வழங்கும் விழாவை அண்மையில் சிறப்பாக நடத்தியது. சினமன் லைஃப் ஹோட்டலில் இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில், நிறுவனத்தின் சிறந்த செயல்திறன் கொண்ட முகவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பணிக்குழுவினர் ஒன்றிணைந்து, பகிரப்பட்ட வெற்றிகளைக் கொண்டாடினர். 

Autobahn 3.0 என்ற துணிச்சலான கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வு, மேம்பட்ட போக்குவரத்து தீர்வுகள், உயர்தர தயாரிப்பு செயல்திறன் மற்றும் உலகத் தரச் சான்றுகளின் மீது நிறுவனம் கொண்டுள்ள மூலோபாய கவனத்தை பிரதிபலித்தது. இவ்விழாவில், நிறுவனத்தின் 125 முன்னணி முகவர்கள், 16 வளர்ச்சி முகவர்கள், இரு சக்கர மற்றும் முச்சக்கர வாகனங்களுக்கான ஏழு விநியோகஸ்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மேலும் சியெட் களனியின் இரண்டு சர்வதேச பங்குதாரர்கள், நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி குழுக்களுடன் இணைந்து பங்கேற்றனர். ஒத்துழைப்பும் சிறப்பான செயல்திறனும் ஒன்றிணைந்த மறக்கமுடியாத நிகழ்வாக இந்த விழா அமைந்தது. இந்நிகழ்வில் உரையாற்றிய சியெட் களனி நிறுவனத்தின் தலைவர் திரு. சாணக டி சில்வா, சவால்கள் நிறைந்த ஆண்டொன்றில் நிறுவனத்தின் வளர்ச்சியை நிலைநிறுத்துவதில் முகவர்கள் வகித்த முக்கிய பங்களிப்புக்கு பாராட்டு தெரிவித்தார். 

கடந்த ஆண்டு கணிக்க முடியாத காலநிலை மாற்றங்களும் உலகளாவிய சவால்களும் நிறைந்ததாக இருந்ததை நாம் அனைவரும் அறிவோம், என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் நேர்மையான ஆலோசனையை நாடி வாடிக்கையாளர்கள் உங்கள் விற்பனை நிலையங்களுக்கு வந்தபோது, நீங்கள் சியெட் நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்தீர்கள். நாளுக்கு நாள் எமது பெயரின் மீதான நம்பிக்கையை உருவாக்குபவர்கள் நீங்கள் தான். கடந்த ஆண்டில் நாம் அடைந்த வளர்ச்சி, உங்கள் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் காரணமாகவே சாத்தியமானது, என்றும் அவர் தெரிவித்தார். 

விருது வழங்கும் விழாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய பங்காளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில், அக்கரைப்பற்று ஆப்தீன் டயர் சர்வீஸ் நிறுவனம் மதிப்புமிக்க சியெட் சிறந்த முகவர் விருது 2025/26-ஐ வென்றது. கொழும்பு 2 – U & H Wheel Service (Pvt) Ltd. முதல் இடத்தைப் பெற்றதுடன், கொழும்பு 14 – Sandeew Auto Enterprises (Pvt) Ltd. இரண்டாம் இடத்தைப் பெற்றது. 

மேலும், பிரிவு வாரியான சிறந்த செயல்திறன் விருதுகளும் வழங்கப்பட்டன. Sandeew Auto Enterprises (Pvt) Ltd. நிறுவனம் ரேடியல் பிரிவில் சிறந்த நிறுவனமாகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், Sandeew Auto Enterprises (Pvt) Ltd. நிறுவனம் ட்ரக் மற்றும் இலகுரக ட்ரக் ஆகிய இரு பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றியைப் பெற்றது. 

பிராண்ட் ஃபினான்ஸினால் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க டயர் வர்த்தக நாமமாகவும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டில் LMD ஆல் இலங்கையில் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தக நாமமாகவும் தரவரிசைப் படுத்தப்பட்ட சியெட் ஆனது, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் டயர் வர்த்தகநாமமாகும், ஆண்டுதோறும் 1.6 மில்லியனுக்கும் அதிகமான டயர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சியெட் களனியானது இலங்கையின் வாகன டயர் தேவைகளில் பாதியை பூர்த்தி செய்வதைத் தவிர, அதன் உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த கூட்டு முயற்சியானது இலங்கையில் ரூ. 8.5 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்ததற்கு பிறகு, மேலும் ரூ. 4.5 பில்லியனை முதலீடு செய்தது, இதன் மூலம் நிறுவனமானது உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும், நாட்டின் போக்குவரத்துத் துறைக்கு நம்பகமான பங்காளியாகவும் அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

Mobitel 1278