Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
ISO 10004:2018 வாடிக்கையாளர் திருப்தி சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது கழிவு முகாமைத்துவ நிறுவனமாக INSEE Ecocycle

Aug 6, 2026 - 04:25 PM

ISO 10004:2018 வாடிக்கையாளர் திருப்தி சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது கழிவு முகாமைத்துவ நிறுவனமாக INSEE Ecocycle
Mobitel Inner 1278

இலங்கையில் நிலையான கழிவு முகாமைத்துவத்தின் முன்னோடியான INSEE Ecocycle, மதிப்புமிக்க ISO 10004:2018 – வாடிக்கையாளர் திருப்தி முகாமைத்துவ அமைப்பு சான்றிதழைப் பெற்ற நாட்டின் முதலாவது கழிவு முகாமைத்துவ நிறுவனமாக மாறியுள்ளது. இது வாடிக்கையாளர் திருப்தியின் மிக உயர் தரங்களுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும், பின்னூட்டங்களைப் பொறுப்புடன் கையாளும் அதன் திறனையும், சேவைத் தரத்தை தொடர்ச்சியாக உயர்த்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றது. 

நிலையான வணிக வளர்ச்சியின் மையத்தில் வாடிக்கையாளர் திருப்தி இருப்பதாக INSEE Ecocycle உறுதியாக நம்புகிறது. ISO 10004:2018ஐ அடைவதில், INSEE Ecocycle ஆனது அதன் அனைத்து செயல்பாடுகளிலும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நடைமுறைகளை உட்பொதித்து, விசேடத்துவத்தை ஊக்குவித்து, பொறுப்புக்கூறல் மற்றும் பங்குதாரர் நம்பிக்கையை மேம்படுத்தி தொழில்துறைக்கு புதிய அளவுகோலை அமைத்துள்ளது. 

ISO 10004:2018 சான்றிதழைப் பெற்றிருப்பதன் மூலம் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை எமது அனைத்து செயற்பாடுகளிலும் முன்னெடுப்பதில் INSEE Ecocycle கொண்டுள்ள உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது. இச் சான்றிதழ் எங்கள் சேவைகளில் நம்பிக்கையை பலப்படுத்துவதுடன் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை உருவாக்க நிலையான கழிவு முகாமைத்துவத் தீர்வுகளை வழங்குவதற்கான எமது தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்துகிறது. என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி, Eng. துசித் குணவர்ணசூரிய தெரிவித்தார். 

Ecocycle, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு சான்றிதழ்களை உள்ளடக்கிய வலுவான சான்றிதழ் தொகுப்பைக் கொண்டுள்ளது. இதில், ISO 14001 – சுற்றுச்சூழல் முகாமைத்துவ அமைப்புகள் (EMS), ISO 45001 – தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகாமைத்துவ அமைப்புகள் (OHSMS), ISO 9001 – தர முகாமைத்துவ அமைப்புகள் (QMS) மற்றும் ISO 39001 – வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு முகாமைத்துவ அமைப்புகள் (RTS) ஆகியவை அடங்குகின்றன. 

இந்த அண்மைய சாதனை மூலம்,, ISO 10004 – தர முகாமைத்துவம் – வாடிக்கையாளர் திருப்தி: கண்காணிப்பு மற்றும் அளவீட்டுக்கான வழிகாட்டுதல்கள் என்ற சான்றிதழும், Ecocycleஇன் தொடர்ந்து விரிவடைந்து வரும் சான்றிதழ் தொகுப்பில் இணைந்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278