Aug 7, 2026 - 09:30 AM
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 - பி.ப. 5.00 பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன,
(i) பால் உற்பத்தியில் தன்னிறைவினை ஊக்குவித்தல் (கந்தசாமி பிரபு).
(ii) கண்டல் தாவர சூழல்தொகுதியை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் (ஹெக்டர் அப்புஹாமி).
(iii) மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல் அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை புகையிரதப் பாதையை விஸ்தரித்தல் (எம்.எஸ். உதுமாலெப்பை).
(iv) கொரோனா பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில், ஒருதலைப்பட்சமாகவும் வலுக்கட்டாயமாகவும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பாக விசாரிப்பதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்தல் (இம்ரான் மகரூப்)
(v) இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறையொன்றைத் தயாரித்தல் (சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர).
(vi) இலங்கையில் வன விலங்குகளை முகாமைத்துவம் செய்வதற்கு தேசியக் கொள்கையொன்றையும் செயன்முறையொன்றையும் வகுத்தல் (சுசந்த குமார நவரத்ன).
(vii) அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தைத் தாபித்தல் (சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்).
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்.
அதன் நேரடி ஔிப்பரப்பை கீழே காணலாம்,

