Header Logo
சினிமா
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று!

Aug 7, 2026 - 10:20 AM

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று!
Mobitel inner

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றில் இன்று (07) விசாரணைக்கு வருகிறது. 

த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மனு கடந்த பிப்​ர​வரி 26 ஆம் திகதி விசா​ரணைக்கு வந்​த​போது, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றப்பட்டது. அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன்? வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். 

மேலும் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் மனுவில் மெயில் ஐ.டி. ஏன் குறிப்பிடவில்லை எனவும், விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்டு 7 ஆம் திகதி ஒத்திவைத்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara