Header Logo
சினிமா
100 கோடி பார்வைகளைக் கடந்த ராமாயணா டிரெய்லர்!

Aug 7, 2026 - 10:28 AM

100 கோடி பார்வைகளைக் கடந்த ராமாயணா டிரெய்லர்!
Mobitel inner

ராமாயணா திரைப்படத்தின் டிரைலர் 100 கோடி பார்வைகளைக் கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரமேஷ் திவாரி இயக்கத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள வரலாற்றுப் படம் ராமாயணா. அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார். 

ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ராமாயணா’ படத்தின் டிரெய்லர் கடந்த ஜூலை.30 ஆம் திகதி அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது. 

இப்படம் அடுத்த தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

4.09 நிமிடங்கள் நீளமுள்ள இந்த டிரெய்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக உள்ளது. 

மூன்று உலகங்களுக்கும் தானே அரசன் என்று பெருமையுடன் அறிவித்துக்கொள்ளும் ராவணனின் (யாஷ்) உரையாடலுடன் டிரெய்லர் தொடங்குகிறது. 

ராமரின் (ரன்பீர்) குழந்தைப் பருவம், அசுரர்களுடனான போர்கள் மற்றும் சீதையுடனான திருமணம் போன்ற காட்சிகள் இதில் காட்டப்பட்டுள்ளன. 

அதன்பிறகு, 14 வருட வனவாசம், சீதாராமன் லட்சுமணனுடன் வனத்திற்குச் செல்வது, மற்றும் ராவணன் சீதையைக் கடத்துவது போன்ற முக்கியக் காட்சிகளுடன் இந்த டிரெய்லர் கதையின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. 

குறிப்பாக, விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், இந்த டிரெய்லர் யூடியூப் உள்பட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாக 100 கோடி (1 பில்லியன்) பார்வைகளைக் கடந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதில், ஹிந்தி டிரெய்லர் மட்டும் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. 

இதன் மூலம் ராமாயணா இந்திய சினிமாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் என்கிற சாதனையைப் புரிந்துள்ளது. இப்படம் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara