Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வில் 7 Star Chakki ஆட்டா மாவினால் தயாரிக்கப்பட்ட உணவுகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் (GI) கொண்டவை என உறுதிப்படுத்தப்பட்டு

Aug 7, 2026 - 11:38 AM

பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வில் 7 Star Chakki ஆட்டா மாவினால் தயாரிக்கப்பட்ட உணவுகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் (GI) கொண்டவை என உறுதிப்படுத்தப்பட்டு
Mobitel Inner 1278

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இறுதி ஆண்டு மாணவியான எச். எம். அமந்தி, சிரேஷ்ட விரிவுரையாளர்களான திரு. என்.வை. ஜெயநாத் மற்றும் கலாநிதி ஜி.எம். சோமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் மேற்கொண்ட அண்மைய சுயாதீன ஆய்வு ஒன்றில், 7 Star Chakki ஆட்டா மாவைக் கொண்டு தயாரிக்கப்படும் மற்றும் ஆட்டா மாவைக் கொண்டு பொதுவாக உட்கொள்ளப்படும் உணவுகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு (Glycemic Index - GI) வரம்பிற்குள் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான அன்றாட உணவாகப் பயன்படுத்துவதற்கு இவை மிகவும் பொருத்தமானவை என்பதை உறுதிப்படுத்துகிறது. இலங்கையில் இரண்டாம் வகை நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வரும் அதேவேளையில், சிறந்த உணவுத் தெரிவுகளுக்கான தேவையும் அதிகரித்து வரும் சூழலில், இந்த ஆய்வு உள்ளூர் ரீதியாகப் பொருத்தமான, அறிவியல் பூர்வமான சான்றுகளை வழங்குகிறது. 

செரண்டிப் மா ஆலை (Serendib Flour Mills) நிறுவனத்தின் 7 Star Chakki ஆட்டா மாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சப்பாத்தி, ரொட்டி மற்றும் பூரி போன்றவை இந்த ஆய்வில் மதிப்பீடு செய்யப்பட்டது. வழக்கமான உணவுப் பழக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இவை தனித்தனியாக உட்கொள்ளப்படும்போதும் மற்றும் கொண்டைக்கடலை கறியுடன் சேர்த்து உட்கொள்ளப்படும்போதும் ஏற்படும் கிளைசெமிக் தாக்கங்கள் (குருதியில் சீனியின் அளவு மாற்றம்) அளவிடப்பட்டன. ஆய்வின் முடிவில், சப்பாத்தி (45), ரொட்டி (44) மற்றும் பூரி (50) ஆகிய மூன்று உணவுகளுமே குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மதிப்புகளைக் கொண்டிருந்தன. இது குருதியில் சீனியின் அளவுகளில் மெதுவான மற்றும் நிலையான அதிகரிப்பையே குறிக்கிறது. 

தயாரிப்பு முறையில் ஏற்படும் மாறுபாடுகள் கிளைசெமிக் விளைவில் குறைந்தபட்ச தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன என்றும், அதே சமயம் கொண்டைக்கடலை கறி சேர்ப்பது குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மதிப்புகளுடன் தொடர்புடையது என்றும் ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்தின. உதாரணமாக, கறியுடன் சேர்த்து உண்ணும்போது ரொட்டியின் கிளைசெமிக் குறியீடு 44-லிருந்து 37-ஆகக் குறைந்தது. இது, சிறந்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டிற்கு உதவுவதில் சமச்சீரான உணவுச் சேர்க்கைகளின் முக்கியப் பங்கை எடுத்துக்காட்டுகிறது. 

இந்த ஆய்வில், வழக்கமான உணவுப் பகுதிகளின் அடிப்படையில் கிளைசெமிக் சுமையும் (Glycemic Load -GL) ஆராயப்பட்டது. அதன் முடிவுகள் 16 முதல் 19 வரையிலான மிதமான GL மதிப்புகளைக் காட்டின. இந்த உணவுகள் சீரான ஆற்றல் வெளியீட்டை வழங்குவதால், சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக இவற்றைத் தொடர்ந்து உட்கொள்வது பொருத்தமானது என்பதை இது உணர்த்துகிறது. 

இந்தக் கண்டறிதல்கள், 7 Star Chakki ஆட்டா மாவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவுகள், அவற்றின் குறைந்த கிளைசெமிக் விளைவின் காரணமாக குருதியில் சீனியில் அளவை சிறந்த முறையில் கட்டுப்படுத்தி, நிர்வகிப்பதற்கு உதவக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. எனவே, சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக உட்கொள்ளும்போது, இவை அன்றாட உணவுகளுக்கு ஆரோக்கியமான தெரிவாக அமைகின்றன. 

இது தொடர்பில் செரண்டிப் மா ஆலை நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “நீண்ட காலமாக நமது அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருந்து வரும் ஒன்றுக்கு இந்த ஆய்வானது முக்கியமான அறிவியல் அங்கீகாரத்தை வழங்குகிறது. 7 Star Chakki ஆட்டா மாவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவுகள், இலங்கைக் குடும்பங்களுக்கு நடைமுறைக்கு உகந்த மற்றும் பழக்கமான தெரிவுகளாக இருக்கும் அதே வேளையில், குருதியில் சீனியில் அளவை சிறந்த முறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவ முடியும் என்பதை இது காட்டுகிறது.” 

இந்த ஆய்வு, உள்ளூர் ஊட்டச்சத்து தொடர்பான புள்ளிவிபரங்களில் உள்ள ஒரு முக்கிய இடைவெளியை நிவர்த்தி செய்கிறது. குறிப்பாக, அன்றாட நுகர்வுப் பழக்கவழக்கங்களில் பிரதான உணவுகள் குருதியில் சீனியின் அளவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் உள்ள இடைவெளியை இது குறிப்பிடுகிறது. ஆட்டா மா அடிப்படையிலான உணவுகள் நிலையான குளுக்கோஸ் செயல்பாட்டிற்கு பங்களிக்க முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம், பாரம்பரிய உணவு முறைகளிலிருந்து விலகாமல் ஆரோக்கியமான மாச்சத்துத் தெரிவுகளை நாடும் நுகர்வோருக்கு, 7 Star Chakki Atta மாவை அறிவியல் ஆதரவு பெற்ற ஒரு தெரிவு என இந்த ஆய்வு முடிவுகள் நிலைநிறுத்துகின்றன. 

தடுப்பு சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், நீரிழிவு நோய் உள்ளிட்ட நீண்டகால சுகாதார அபாயங்களை நிர்வகிப்பதில் தகவலறிந்த உணவுத் தெரிவுகளின் பங்கை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதே நேரத்தில், நம்பகமான ஆராய்ச்சியின் ஆதரவுடன் அன்றாட உணவுகளின் மதிப்பையும் இது வலுப்படுத்துகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278