Header Logo
செய்திகள்
சிறையின் வாயிற்கதவை முற்றுகையிட்ட பல்லன்சேன கைதிகள்

Aug 7, 2026 - 12:24 PM

சிறையின் வாயிற்கதவை முற்றுகையிட்ட பல்லன்சேன கைதிகள்
Mobitel inner

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சற்றுமுன்னர் அதன் வாயிற்கதவை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

முன்னதாக பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதனால் அங்கு தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுகின்றது. 

இந்நிலையில் அதிகளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara