Header Logo
இந்தியா
முதலமைச்சர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

Aug 8, 2026 - 02:28 PM

முதலமைச்சர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம்: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
Mobitel inner

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான அனைத்​துக் கட்​சிகளின் எம்​.பி.க்​கள் கலந்​தாய்​வுக் கூட்​டம் தமிழக முதலமைச்சர் விஜய் தலை​மை​யில் சென்​னை​யில் இன்று (8) நடை​பெறுகிறது. 

பாராளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் கடந்த ஜூலை 20-ம் திகதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில் திருத்​தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மீண்​டும் கொண்​டுவர இந்தி மத்​திய அரசு முயற்​சிப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​ இருந்தன. 

இந்​த சூழலில் தொகுதி மறு​வரையறை பணி​கள் குறித்து விவா​திப்​ப​தற்​காக தமிழக எம்​.பி.க்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​துக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்​திருந்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்டிருந்த அறி​விப்​பில், “மத்​திய அரசால் மேற்​கொள்ள உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ள தொகுதி மறு​வரையறை பணி​கள் மற்​றும் அதனால் தமிழகத்​துக்கு ஏற்​படும் தாக்​கங்​கள் குறித்​து, மாநில எம்​.பி.க்​களின் கலந்​தாய்​வுக் கூட்​டம் இன்று மதி​யம் 3.00 மணிக்கு சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் நடத்​தப்பட உள்​ளது. இதற்கு முதலமைச்சர் விஜய் தலைமை வகிப்​பார். இதற்​கான அழைப்​பிதழ் டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லத்​தின் மூலம் அனைத்து மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை உறுப்​பினர்​களுக்கும் அனுப்​பப்​பட்டு வரு​கிறது” என்று கூறப்​பட்டிருந்தது. 

இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்று முதலமைச்சர் விஜய் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை, இன்பதுரை உள்ளிட்டோர் டெல்லியில் உள்ளதாக தெரிகிறது. 

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட நிபந்தனை விதித்துள்ளதால் தி.மு.க. எம்.பி.க்களும் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தை தி.முக. புறக்கணித்துள்ளது 

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எம்.பி.க்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது” என்று தெரிவித்துள்ளார். 

இதேபோல தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எம்.பி. சுதீஷ் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. 

தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கவில்லை. மக்கள் நீதி மய்யத்தின் ராஜ்ய சபா எம்.பியான கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. 

இதன்படி இக்கூட்டத்தில் பின்வரும் கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்: 

காங்கிரஸ் - 12 

வி.சி.க. - 2 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) - 2 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) - 1 

ம.தி.மு.க. (MDMK) - 1 

தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் (MNM) ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara