Aug 9, 2026 - 07:01 AM

'தெரண-சிக்னல்' கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா இன்று (9) காலி முகத்திடலில் நடைபெறுகிறது.
தெரண ஊடக வலையமைப்பு, சுற்றுலா அபிவிருத்தி பணியகம் மற்றும் பொலிஸார் இணைந்து 6ஆவது முறையாக ஏற்பாடு செய்யும் இந்த சர்வதேச பட்டத் திருவிழாவில் உள்நாட்டு போட்டியாளர்கள் மட்டுமன்றி 30 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பட்டக் கலைஞர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பட்டத் திருவிழா பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், பிற்பகல் 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இலங்கையின் முதலாவது 'இரவு நேர பட்டத் திருவிழாவும் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












