Aug 9, 2026 - 07:44 AM

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், அந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, தொகுதி மறுவரையறை குறித்த மத்திய அரசின் அரசமைப்பு சட்டத்திருத்தம் மற்றும் புதிய மசோதாவை எதிர்த்து ஓட்டுப்போட வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாக்க, சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்ற ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தமிழகத்தின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதன் மூலம் பாதிக்கும் என்பதால், எம்பிக்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையினை கைவிட வேண்டும்.
தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்துவதற்கு அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.












