Aug 9, 2026 - 11:10 AM

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரின் வனப்பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரின் விமானி மற்றும் அதில் பயணித்த மூன்று பயணிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த மூன்று பயணிகளும் கொலம்பிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரேசிலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வான்வழிச் சேவைகளை வழங்கும் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தீப்பரவல் ஏற்பட்டுள்ளடன், தீயைக் கட்டுப்படுத்துவதற்காகத் தீயணைப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

































