Header Logo
செய்திகள்
பெருந்தொகை மதுபானப் போத்தல்களுடன் நபரொருவர் கைது

Aug 11, 2026 - 11:28 AM

பெருந்தொகை மதுபானப் போத்தல்களுடன் நபரொருவர் கைது
Mobitel inner

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட பெருந்தொகையான மதுபானப் போத்தல்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (10) இரவு அறுகம்பை முகாமின் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 408 பியர் கேன்களும் பல்வேறு வகையான 36 மதுபானப் போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

தற்போது அறுகம்பை சுற்றுலா வலயத்திற்கு அதிகளவிலான வெளிநாட்டவர்கள் வருகை தருவதால், அங்கு சிறிய அளவிலான விடுதிகளை நடாத்திச் செல்லும் சிலர் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களைக் கொண்டுவந்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கைப்பற்றப்பட்ட மதுபானத்தின் பெறுமதி சுமார் 4,20,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட மதுபானப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara