Header Logo
செய்திகள்
14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

Aug 11, 2026 - 07:18 PM

14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
Mobitel inner

ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தைக் கடந்துள்ளது. 

அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 9 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,408,620 ஆகப் பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இதேவேளை, ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை 65,202 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 13,483 ஆகும். 

இரண்டாவதாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 7,460 ஆகப் பதிவாகியுள்ளது. 

மூன்றாவதாக பிரான்ஸிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 5,388 ஆகும். 

இதேவேளை, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 351,713 ஆகும். 

இது தவிர, பிரித்தானியாவில் இருந்து 137,861 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 92,940 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

மேலும், ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பெப்ரவரி மாதத்திலேயே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 279,328 ஆகப் பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara