Header Logo
பல்சுவை
வீடுகளுக்குள் நுளம்பு மருந்து அடித்ததால் இருவர் பலி!

Aug 12, 2026 - 02:38 PM

வீடுகளுக்குள் நுளம்பு மருந்து அடித்ததால் இருவர் பலி!
Mobitel inner

கோயம்புத்தூரில் அன்னூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக நுளம்பு மருந்து தெளிக்கும் பணியின்போது, நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இருந்த வீடுகளுக்குள் அத்துமீறி புகை அடித்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கோவை – சத்தி வீதியில் உள்ள உப்புத்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில் பல குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுகாதாரப் பணிகள் நடைபெற்று வந்தன. 

இந்நிலையில், நுளம்பு மருந்து புகை அடிக்கும் பணியாளர்கள் வீடுகளுக்கு வெளியே மட்டுமே மருந்து தெளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

குறிப்பாக, ஒரு வீட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இரவு நேரத்தில் வீடு திரும்பியிருந்ததாகவும், அதே வீட்டில் கைக்குழந்தை ஒன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதனால், வீட்டிற்குள் புகை அடிக்க வேண்டாம் என்றும், வீட்டிற்கு வெளியே மட்டும் நுளம்பு மருந்து தெளிக்குமாறும் அங்கிருந்த பெண்கள் கெஞ்சியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பணியாளர்கள் அரசு விதிமுறைகளின்படி தாங்கள் பணியை மேற்கொள்வதாகக் கூறி, வீட்டிற்குள் புகை அடித்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு மற்றும் வீசிங் பிரச்சினைக்காக வைத்தியசாலைக்கு சென்று வந்திருந்த ஒருவருக்கும் புகையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அருகிலுள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் இருந்த ஒருவர், நுளம்பு மருந்து புகை அடிக்கப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்ததாகவும், அதே வீதியில் மேலும் ஒருவர் உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த உயிரிழப்புகளுக்கும் நுளம்பு மருந்து புகை காரணமா என்பது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நுளம்பு மருந்து தெளிப்பு தொடர்பாக ஏழாவது வார்டு கவுன்சிலரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்த போதும், பணியாளர்கள் தங்களது பணியைத் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், எதிர்ப்பு தெரிவித்த பெண்களை வழக்குப்பதிவு செய்வதாகவும், அபராதம் விதிப்பதாகவும் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் அவசியமானவை என்றாலும், நோயாளிகள், குழந்தைகள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் இருக்கும் வீடுகளில் உரிய முன்னெச்சரிக்கையுடன் கொசுமருந்து தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, நுளம்பு மருந்து தெளிப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா, உயிரிழப்புகளுக்கும் புகை மருந்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


MOST READ

காணொளி
இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

Mobitel Upahara