Header Logo
விளையாட்டு
GT-க்கு வரவிரும்பும் ஹர்திக் - குஜராத் வைத்த செக்!

Aug 12, 2026 - 03:37 PM

GT-க்கு வரவிரும்பும் ஹர்திக் - குஜராத் வைத்த செக்!
Mobitel inner

மும்பையிலிருந்து குஜராத் டைட்டன்ஸுக்கு சென்று 2022 ஐபிஎல் கிண்ணத்தை வென்ற ஹர்திக் பாண்டியா, மீண்டும் மும்பைக்கு டிரேடாகி அணி தலைவராக பொறுப்பேற்றதும் அணிக்குள் பிளவு, ரோகித் சர்மா விவகாரம், ரசிகர் எதிர்ப்பு என சர்ச்சைகள் வெடித்தன. 

தொடர்ந்து மூன்று சீசன்களில் மோசமான முடிவுகள் காரணமாக, ஹர்திக் தான் தோல்விக்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்து, அவர் தானே அணியை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்ததாக தகவல் பரவுகிறது. 

மும்பை அணியிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியா, அந்த அணிக்காக 2022 ஐபிஎல் கிண்ணத்தை வென்று சாதனை படைத்தார். அதுமட்டுமில்லாமல் 2023 ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும் குஜராத் அணியை வழிநடத்திய பாண்டியா, கிட்டத்தட்ட 2 ஆவது கிண்ணத்தை வெல்லும் இடத்திலேயே இருந்தார். இறுதிப்போட்டியின் கடைசி 2 பந்தில் சிஎஸ்கே வீரர் ஜடேஜா அடித்த சிக்சர், பவுண்டரி காரணமாகவே ஹர்திக் பாண்டியாவின் கைகளில் இருந்து 2 ஆவது கிண்ணத்தை நழுவியது. 

டைட்டன்ஸ் அணியில் துடுப்பாட்ட வீரராக மட்டுமில்லாமல் ஒரு அணி தலைவராகவும் மிளிர்ந்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் கொண்டுவர நினைத்த மும்பை இந்தியன்ஸ் அணி, 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மிகப்பெரிய டிரேடிங் மூலம் கொண்டுவர ஹர்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. 

ஆனால் ‘வந்தால் அணி தலைவராக தான் வருவேன்’ என ஹர்திக் டிமாண்ட் வைக்க, ரோகித் சர்மாவை அணி தலைவர் பதவியிலிருந்து நீக்கிய MI அணி ஹர்திக்கை புதிய அணி தலைவராக நியமித்தது. மும்பை அணியின் இந்த செயலால் ஏற்கனவே மும்பை அணியிலிருந்த மற்றவீரர்களுடன் ஹர்திக் பாண்டியாவிற்கு மோதல் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. 

ரோகித்திற்கு ஆதரவாக ஒரு தரப்பினர், ஹர்திக்கிற்கு ஆதரவாக ஒரு தரப்பினர் என மும்பை அணியே இரண்டாக உடைந்ததாகவும் சொல்லப்பட்டது. 

அதுமட்டுமில்லாமல் ரோகித் சர்மாவிற்கு ஹர்திக் பாண்டியா மரியாதை கொடுக்கவில்லை எனக் கூறி ரோகித்தின் ரசிகர்களும் அவருக்கு எதிராக திரும்பினர். இப்படி தொடர்ந்து மும்பை அணிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள், அந்த அணியின் விளையாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. 5 முறை கோப்பை வென்ற அணியான MI அணி, ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தை பிடித்ததோடு, 2025 இலும் குவாலிஃபயர் 2 சுற்றோடு வெளியேறியது. 

இந்தசூழலில் 2026 ஐபிஎல் சீசனில் அந்த அணி கம்பேக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 9 ஆவது இடத்தில் முடித்து பரிதாபமாக வெளியேறியது. தொடர்ந்து 3 சீசன்களாக மோசமாக செயல்பட்டுவரும் நிலையில், ஹர்திக் பாண்டியாவே அதற்கு முழு காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால் தன்னை அணியிலிருந்து வெளியேற்றும்படி மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் ஹர்திக் பாண்டியா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தசூழலில் ஹர்திக் பாண்டியா மும்பையிலிருந்து வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்லவிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் தகவல் வெளியானது. அதேபோல KKR அணியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்பட்டது. இந்த தகவல்களுக்கு மத்தியில் தற்போது ஹர்திக் பாண்டியா மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கே திரும்ப விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், டைட்டன்ஸ் அணியிடமும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது. 

ஹர்திக் பாண்டியா திரும்பவர டைட்டன்ஸ் அணியும் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் ‘இருங்க தம்பி எங்களுக்கு விருப்பம் இருந்தாலும், எங்க கேப்டன் தான் கடைசி முடிவெடுக்கனும்’ என முடிவெடுக்கும் அதிகாரம் அணி தலைவர் கில்லிடமே நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. அதற்கு சுப்மன் கில்லும் ஹர்திக் பாண்டியா வர சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் ஹர்திக் மீண்டும் கேப்டன்சி டிமாண்ட் வைத்ததாக சொல்லப்படுகிறது. சுப்மன் கில் தான் தங்களுடைய நிரந்தர அணி தலைவர் என்ற முடிவில் இருக்கும் டைட்டன்ஸ் அணி, அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும், அதனால் இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ராஜாவாக ஜொலித்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியில் சந்தித்த அவமானங்களுக்கு பிறகு, டைட்டன்ஸ் அணிக்கும் திரும்ப முடியாதது குறித்து ‘ஹர்திக்கிற்கு இப்படி ஒரு நிலைமையா என்றும், உனக்கு ஆவணும் யா என்றும்’ ரசிகர்கள் இருவேறுவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


MOST READ

காணொளி
இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

Mobitel Upahara