Aug 12, 2026 - 03:51 PM

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002 இல் வெளியான ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். 14 வயதில் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதிகாவுக்கு ஸ்ரீ படம் பெரியளவில் ஹைப் கொடுக்கவில்லை. அதன்பின் ஆல்பம் படத்திலும் தித்திக்குதே படத்திலும் நடித்த ஸ்ருதிகா சினிமாவில் இருந்து விலகினார்.
தொழிலதிபரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்ற ஸ்ருதிகா, குக் வித் கோமாளி 3 சீசனில் பங்கேற்று டைட்டிலை கைப்பற்றினார்.
அதன்பின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்த ஸ்ருதிகா, பிக்பாஸ் இந்தி 18 ஆவது சீசனில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட 96 நாட்கள் வீட்டில் இருந்து எவிக்ட்டாகி வெளியேறினார்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் பேட்டியொன்றில் பேசிய ஸ்ருதிகா, நான் திருமணம் செய்யும் வரை ஆபாச படங்களை பார்த்தது இல்லை. ஆனால் திருமணம் முடிந்த பிறகு என் கணவர் அர்ஜுன் நீ ஆபாச படம் பார்க்க வேண்டும் என கூறிவிட்டு அதை போட்டு காண்பித்தார்.
அதை பார்த்தவுடன் எனக்கு வாந்தி வந்துவிட்டது, இருக்க எதிர்பார்ப்பு எல்லாம் போய்விடு, அதோடு நிறுத்திவிட்டேன். நான் யாரையும் பார்க்கவும் விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.
















