Aug 12, 2026 - 05:04 PM

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க இராணுவத்தின் "முழுமையான கட்டுப்பாட்டின்" கீழ் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எச்சரிக்கைகளைப் புறக்கணித்து ஈரானிய துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்ற பனாமா கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பலொன்றின் மீது இரண்டு ஏவுகணைகளை வீசி, அதன் வழிகாட்டி அமைப்பை அமெரிக்க இராணுவம் செயலிழக்கச் செய்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டுமாயின், அமெரிக்காவின் போரும் தடைகளும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவினால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், பிராந்திய போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஈரான் பலமாகக் கோரியுள்ளது.
இந்த அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்படும் வரை நீரிணை மூடப்பட்டிருக்கும் என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹ்சென் ரெஸாய் தெரிவித்துள்ளார்.
















