Header Logo
வணிகம்
அமானா வங்கியின் 15 வருட பூர்த்தியை முன்னிட்டு ஞாபகார்த்த நினைவு மேலுறை மற்றும் அஞ்சல் முத்திரை அறிமுகம்

Aug 12, 2026 - 03:46 PM

அமானா வங்கியின் 15 வருட பூர்த்தியை முன்னிட்டு ஞாபகார்த்த நினைவு மேலுறை மற்றும் அஞ்சல் முத்திரை அறிமுகம்
Mobitel inner

அமானா வங்கி, இலங்கை தபால் திணைக்களத்தின் முத்திரை பணியகத்துடன் இணைந்து, வங்கியின் 15 வருட பூர்த்தியைக் குறிக்கும் விசேட ஞாபகார்த்த நினைவு மேலுறை மற்றும் அஞ்சல் முத்திரை ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. இந்த வைபவ ரீதியான அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 12 ஆம் திகதி நடைபெற்றதுடன், இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் அமானா வங்கியின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலும், வட்டி-சாராத வங்கியியல் மாதிரியைக் கொண்டு இயங்கும் இலங்கையின் முதலாவதும், ஒரே அங்கீகாரம் பெற்ற வர்த்தக வங்கி எனும் நிலையை பாராட்டும் வகையிலும் அமைந்திருந்தது. 

2011 ஆம் ஆண்டில் தனது வங்கிச் செயற்பாடுகளைத் தொடங்கியதில் இருந்தான அமானா வங்கியின் பயணத்திற்கு இந்த நினைவு மேலுறை மற்றும் அஞ்சல் முத்திரை ஆகியவை கௌரவமளிக்கின்றன. இது அபிவிருத்தியை மையமாகக் கொண்டதும் மக்களுக்கு நட்பான வங்கி அணுகுமுறையின் மூலம் வளர்ச்சியை ஏற்படுத்தி, வாழ்க்கையை வளப்படுத்தி, பெறுமதியை வழங்கிய 15 ஆண்டுகாலப் பயணத்தைப் பிரதிபலிக்கின்றது. ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், அமானா வங்கி நாடு முழுவதும் தனது தடத்தை படிப்படியாக விரிவுபடுத்தி, 80 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் சுய-வங்கி சேவை மையங்கள் மூலமாக அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தளத்திற்குச் சேவை வழங்கி வருகிறது. அத்துடன், கூட்டாண்மை துறைக்குத் அனுபவம் வாய்ந்த அணுகுமுறையைப் பின்பற்றி, சில்லறை, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவு மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கியியலில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. வங்கியின் சொத்துக்களை அடிப்படையாகக் கொண்ட வங்கியியல் மாதிரி, பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகளுக்கு நிதிப் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருவதுடன், தனது விழுமியங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வாக்குறுதிக்கு அமைய தொழில்முனைவோர், குடும்ப நிதித் தேவைகளுக்கு மற்றும் வியாபாரங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. 

இந்த அறிமுக வைபவத்தில், இலங்கை தபால் திணைக்களத்தின் பிரதி தபால் மாஅதிபர் பிரேமசந்திர ஹேரத், தபால் திணைக்களத்தின், இலங்கை முத்திரை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் லங்கா டி சில்வா, அமானா வங்கியின் ஸ்தாபக தவிசாளர் ஒஸ்மான் காசிம், தற்போதைய தவிசாளர் அஸ்கி அக்பராலி, தற்போதைய முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி – மொஹமட் அஸ்மீர்.ஸ்தாபக பணிப்பாளர்களான தையிப் அக்பராலி, ருஸ்லி ஹுஸைன், ஜஸ்ரி மக்தொன் இஸ்மைல், கலாநிதி. ஏ. ஏ. எம். ஹரூன், ஸ்தாபக முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஃபைசால் சாலே, தற்போதைய பணிப்பாளர்சபை அங்கத்தவர்கள், ஷரீஆ மேற்பார்வைக் குழு அங்கத்தவர்கள், OrphanCare காப்பாளர்கள் மற்றும் வங்கியின் நிர்வாகக் குழுவினர், சிரேஷ்ட முகாமையாளர்கள் மற்றும் கிளை முகாமையாளர்கள் என பலரும் அடங்கியிருந்தனர். முத்திரை அறிமுகத்திற்கு முன்னதாக, வங்கி தனது 15 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில், இலங்கை தேசியக் கொடியை, கூட்டாண்மை அலுவலக வளாகத்தில் ஏற்றியிருந்தது. 

அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி முத்திரை அறிமுகம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியின் 15 வருட பூர்த்தியை நாம் கொண்டாடும் நிலையில், இந்த நினைவு முதல் நாள் மேலுறையும், அஞ்சல் முத்திரையும், தொலைநோக்குப் பார்வை, சவால்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு வியத்தகு பயணத்திற்கான நீடித்த எடுத்துக்காட்டாக அமைகின்றன. இவை நாங்கள் எட்டிய மைல்கற்களை மட்டுமல்லாமல், எமது வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், ஒழுங்குமுறைப்படுத்துநர்கள், பங்காளர்கள் மற்றும் நாங்கள் சேவையாற்றும் பேறு பெற்ற சமூகங்கள் எம்மீது வைத்துள்ள மாறாத நம்பிக்கையையும் அடையாளப்படுத்துகின்றன.” 

“கடந்த காலத்தின் நினைவுகூறலுக்கு அப்பால், இது எங்களை தொடர்ந்து முன்னோக்கி வழிநடத்தும் விழுமியங்களையும், நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது. இது ஒரு துணிச்சலான தொலைநோக்குப் பார்வையில் நிறுவப்பட்டு, தனது பணியாளர்களின் அர்ப்பணிப்பினால் வலுவூட்டப்பட்டு வளர்க்கப்பட்டு, தனது பங்குதாரர்களின் விசுவாசத்தினால் பலப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனத்தின் கதையைக் கூறுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், நிலையான பெறுமதியை உருவாக்குவதற்கும், வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், எமது தேசத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதற்குமான எமது அர்ப்பணிப்பை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.” என்றார். 

அமானா வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், “எமது 15 ஆவது ஆண்டு நிறைவை இந்த சிறப்பு நினைவு மேலுறை மற்றும் அஞ்சல் முத்திரை வெளியீட்டுடன் கொண்டாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஒரு அஞ்சல் முத்திரையின் மூலம் நிறுவனத்தின் மைல்கல்லை நினைவு கூர்வதில் மிகவும் அர்த்தமுள்ள ஒரு விடயம் உள்ளது. அஞ்சல் முத்திரைகள் வரலாற்றின் தருணங்களைப் பாதுகாப்பதுடன், ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்காகப் பங்களித்த மனிதர்கள், நிறுவனங்கள் மற்றும் நிகழ்வுகளை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கான ஒரு ஆதாரமாகவும் செயல்படுகின்றன. எனவே, இங்கு வெளியிடப்படும் இந்த சிறப்பு நினைவு மேலுறை மற்றும் அஞ்சல் முத்திரையானது, அமானா வங்கியின் பதினைந்து ஆண்டுகாலப் பயணத்திற்கும், அது கட்டியெழுப்பப்பட்ட விழுமியங்களுக்கும் ஒரு நீடித்த அடையாளமாக இருக்கும்.” என்றார். 

சிறப்பு நினைவு மேலுறை மற்றும் அஞ்சல் முத்திரை ஆகியவற்றின் வெளியீடானது, அமானா வங்கியின் 15 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைவதுடன், நோக்கத்துடன்கூடிய வளர்ச்சியினை அடிப்படையாகக் கொண்ட வங்கியின் பயணத்தையும், இலங்கை முழுவதும் வளர்ச்சியை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையை வளம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான ஈடுபாட்டையும் பிரதிபலிக்கிறது. 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 

வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது. 

இலங்கை தபால் திணைக்களத்தின் பிரதி தபால் மா அதிபர் திரு. பிரேமச்சந்திர ஹேரத், அமனா வங்கியின் விசேட ஞாபகார்த்த அஞ்சல் உறை மற்றும் முத்திரையை, தவிசாளர் அஸ்கி அக்பரலி அவர்களிடம் கையளிக்கிறார். இந்நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் மற்றும் அஞ்சல் தலைமைப் பணியகத்தின் பணிப்பாளர் லங்கா டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.


MOST READ

காணொளி
இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

Mobitel Upahara