Header Logo
SLIC
Rhythams of Lanka
இந்தியா
அடுத்தடுத்து நில அதிர்வால் அதிர்ந்த பகுதிகள்!

Aug 14, 2026 - 09:42 AM

அடுத்தடுத்து நில அதிர்வால் அதிர்ந்த பகுதிகள்!
Mobitel inner

இந்தியாவின் மகாராஷ்டிராவில் இன்று (14) அதிகாலை 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதிகாலை 5.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. 

பூமிக்கு அடியில் சுமார் 3 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதிகாலையில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். 

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது சொத்துக்களுக்கு பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை. 

முன்னதாக 3 நாட்களுக்கு முன்பாக மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 1 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனிடையே இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று காலை 6.36 மணியளவில் பூமிக்கு 5 கிலோமீட்டர் ஆழத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. 

இந்தியாவை தவிர்த்து ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4.29 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அதைத்தொடர்ந்து அதிகாலை 4.41 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது சொத்துக்களுக்கு பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.


MOST READ

காணொளி
நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara