Header Logo
செய்திகள்
சிறைச்சாலை அதிகாரிகளை நோட்டமிட்ட நபர் கைது

Aug 15, 2026 - 11:03 AM

சிறைச்சாலை அதிகாரிகளை நோட்டமிட்ட நபர் கைது
Mobitel Inner 1278

சிறைச்சாலை அதிகாரிகளின் தகவல்களை இரகசியமாகச் சேகரித்து வந்த நபர் ஒருவரை சகஸ்புர பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இவர் அண்மையில் புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தின் போது உயிரிழந்த மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்பவரின் நெருங்கிய தொடர்பை பேணியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர், அஸ்மான் என்பவரால் கடந்த ஆண்டு தெஹிவளை வட்ரப்பல வீதியில் நடத்தப்பட்ட இரட்டைக்கொலை சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் என்றும் தெரியவந்துள்ளது. 

புதிய மெகசின் சிறைச்சாலையில் பதற்றம் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர். 

மேலும், இவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'கொஸ் மல்லி' என்ற குற்றவாளியின் நெருங்கிய சகா என்பதும் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கைபேசியைப் பரிசோதித்த போது, 'கொஸ் மல்லி' என்பவருடன் நடத்திய பல உரையாடல்களின் குரல் பதிவுகளைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

அந்த தொலைபேசி உரையாடல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் திரட்டப்பட்ட தகவல்கள் உள்ளடங்கியிருந்ததுடன், அவர்களுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

Mobitel 1278