Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
பெண்களை இப்படித்தான் காட்டுவதா?

Aug 15, 2026 - 11:00 AM

பெண்களை இப்படித்தான் காட்டுவதா?
Mobitel inner

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் திரைப்படத்தின் டிரைலரில் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து கன்னட நடிகை ரிஷிகா சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற 26 ஆம் திகதி இப்படம் வெளியாகிறது. 

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து வரவேற்பை பெற்றாலும், கடும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், கன்னட நடிகை ரிஷிகா சிங் இதுகுறித்து தனது கண்டனத்தை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "கன்னட சினிமா உலகளவில் வளர வேண்டும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், 'டாக்சிக்' திரைப்படத்தின் டிரைலரில் பெண்களை சித்தரித்துள்ள விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. படத்தில் 5 முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். அவர்களில் யாராவது கண்ணியமாகவோ அல்லது அழகாகவோ காட்டியுள்ளார்களா? பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை அழைத்து வந்து இப்படித்தான் காட்டுவதா?" என கேட்டுள்ளார். 

மேலும், "ஒரு குடும்ப தலைவனாகவும், தந்தையாகவும் இருக்கும் யாஷ், பெண்களை மதிக்கும் விதத்தில் கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றால், உங்களை கர்நாடகாவை விட்டு வெளியேற்ற செய்வோம்" என எச்சரித்துள்ளார்.


MOST READ

காணொளி
அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

Mobitel Upahara