Header Logo
வணிகம்
JXG, Continental Insurance Lanka Limited நிறுவனத்தின் 100% பங்குகளை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Aug 14, 2026 - 12:10 PM

 JXG, Continental Insurance Lanka Limited நிறுவனத்தின் 100% பங்குகளை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
Mobitel Inner 1278

ஜனசக்தி பிஎல்சி (JXG), இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) ஒப்புதலுக்கு உட்பட்டு, Continental Insurance Lanka Limited (CILL) நிறுவனத்தின் 100% பங்குகளை கையகப்படுத்துவதற்காக அதன் ஒரே பங்குதாரரான Melstacorp PLC (MELS) உடன் பங்கு கொள்முதல் ஒப்பந்தமொன்றில் நுழைந்துள்ளது. இப் பரிவர்த்தனையின்படி, JXG ஆரம்பத்தில் 81% கட்டுப்பாட்டுப் பங்குகளைக் கையகப்படுத்தும். அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள பங்குகள் படிப்படியாகக் கையகப்படுத்தப்படும்; அதாவது, முதல் ஆண்டில் 9% பங்குகளும், அதற்கடுத்த ஆண்டில் 10% பங்குகளும் கொள்வனவு செய்யப்படும். 

இது பொதுக் காப்புறுதித் துறையில் தனது தடத்தை விரிவுபடுத்துவதிலும், அதன் ஆரம்பப் பொது வழங்கல் நடவடிக்கையில் (IPO) கோடிட்டுக் காட்டப்பட்ட மூலோபாய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதிலும் JXG எடுத்துள்ள குறிப்பிடத்தக்க படியாகும். இப் பரிவர்த்தனை, JXG இற்கு வலுவான பாரம்பரியம் உள்ள ஒரு சந்தையில் மீண்டும் நுழைய வழிவகுப்பதுடன் இலங்கையின் முன்னணி நிதிக்குழுமங்களில் ஒன்றாக அதன் நிலையை வலுப்படுத்துவதோடு முழுமையாக ஒருங்கிணைந்த நிதிச்சேவைகள் அடங்கிய சூழலமைப்பை உருவாக்கும் அதன் தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது. 

இக் கையகப்படுத்தல், JXG இன் நிதிச்சேவைத் தளத்தை அதன் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவம், வலுவான நிர்வாகம் மற்றும் நெறிமுறையான செயலாக்கம் ஆகியவற்றுடன் CILL இன் நிறுவப்பட்ட சந்தை இருப்புடன் இணைப்பதன் ஊடாக குறிப்பிடத்தக்களவு மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பத்தை முக்கிய வேறுபடுத்தும் காரணியாகக் கொண்டு, JXG தனது வளர்ந்து வரும் சேவைத் தொகுப்பின் ஊடாக புத்தாக்கத்தைத் துரிதப்படுத்தவும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் வலுப்படுத்தவும், விரிவான மற்றும் ஒருங்கிணைந்த நிதித்தீர்வுகளை வழங்கவும் எதிர்பார்க்கிறது. 

இலங்கையின் முன்னணி பொதுக் காப்புறுதி நிறுவனங்களின் தரவரிசையில் உள்ள CILL, JXG இற்கு வளர்ச்சிக்கான வலுவான தளத்தை வழங்குகிறது. 2025 டிசம்பர் 31 இல் (FYE25) முடிவடைந்த நிதியாண்டின்படி, CILL ஆனது ரூ.10.73 பில்லியன் மொத்த எழுதப்பட்ட பிரீமியம் (GWP) தொகுப்பையும், ரூ.6.64 பில்லியன் முதலீட்டுத் தொகுப்பையும் மற்றும் ரூ.14.20 பில்லியன் மொத்த சொத்துகளையும் பதிவு செய்துள்ளது. CILL, பன்முகப்படுத்தப்பட்ட பொதுக் காப்புறுதி வணிகத்தையும், நாடெங்கிலும் 61 வணிக இடங்களை கொண்ட விரிவான விநியோக வலையமைப்பையும், 700 இற்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது. இக் கையகப்படுத்தல் ஆனது, JXG தனது காப்புறுதி வணிகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை வழங்குவதுடன், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை உருவாக்குவதற்கும் வழிவகுக்கிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

Mobitel 1278