Header Logo
வணிகம்
Vietjet தனது புதிய கொழும்பு வழித்தடத்தில் விருது வென்ற வர்த்தக நாமம் மற்றும் பிரத்தியேகமான சிவப்பு சீருடையை அறிமுகம் செய்கின்றது

Aug 14, 2026 - 12:15 PM

Vietjet தனது புதிய கொழும்பு வழித்தடத்தில் விருது வென்ற வர்த்தக நாமம் மற்றும் பிரத்தியேகமான சிவப்பு சீருடையை அறிமுகம் செய்கின்றது
Mobitel Inner 1278

Vietjet, ஆகஸ்ட் 18, 2026 அன்று கொழும்புக்கும் Ho Chi Minh Cityக்கும் இடையிலான தனது நேரடி விமானச் சேவையைத் ஆரம்பிக்கத் தயாராகி வரும் நிலையில், AirlineRatings அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான Flyers’ Choice Awards பெற்ற இரண்டு சமீபத்திய கௌரவங்களை அண்மையில் கொண்டாடுகிறது. விருப்பத்திற்குரிய குறைந்த கட்டண விமானச் சேவை மற்றும் சிறந்த விமானப் பணிப்பெண்கள் சீருடை ஆகியன அந்த விருதுகளில் அடங்கியுள்ளன. பயணிகளின் வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் இவ்விருதுகள், வியட்ஜெட்டின் தனித்துவமான முத்திரை மற்றும் விமானப் பணிப்பெண்களின் பாணியை அங்கீகரிப்பதுடன், இலங்கைக்கு குறித்த விமானச் சேவையின் அறிமுகத்திற்கான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது. 

இரு பிரிவுகளிலும் Vietjet பெற்ற முதலிடங்கள், மலிவான பயணக் கட்டணங்கள் மற்றும் விரிவடைந்து வரும் சேவை வலையமைப்பு முதல் விமானப் பணிப்பெண்களின் தனித்துவமான பாணி வரை, பயணிகளைக் கவரும் விமானச் சேவை அனுபவத்தின் வெவ்வேறு அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன. நவீன onboard அனுபவத்துடன் மலிவான மற்றும் வசதியான பயண விருப்பங்களை அவ்வொழுங்கு தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், இந்த கௌரவங்கள் Vietjet இன் சர்வதேச நற்பெயரை மேலும் வலுப்படுத்துகின்றன. 

AirlineRatings இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷரன் பீட்டர்சன் கருத்துத் தெரிவிக்கையில், “இரண்டு பிரிவுகளில் வெற்றி பெறுவது Vietjet இன் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைவதோடு, சர்வதேச அரங்கில் அந்த விமானச் சேவை நிறுவனம் இப்போது உறுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தில் அதன் பணிப்பெண்களின் சீருடை முக்கிய பங்கு வகிக்கிறது. தனித்துவமான, மகிழ்ச்சியான மற்றும் உடனடியாக அடையாளம் காணக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்தச் சீருடை, பயணம் முடிந்த பின்னரும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் ஒரு மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிறந்த விமானப் பணிப்பெண்கள் சீருடைக்காகப் பெற்ற Flyers’ Choice கௌரவமானது இதனை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.” என்றார். 

ஐரோப்பிய வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட Vietjet விமானப் பணிப்பெண்களின் சீருடை, அவ்விமானச் சேவையின் அடையாளமான சிவப்பு நிறத்தைக் கொண்டிருப்பதுடன், இளமைச் சக்தியையும் இளைஞர் கேடட் (youth cadet) ஆடைகளின் ஈர்ப்பையும் ஒன்றிணைக்கிறது. bow ties, garrison caps, plaid கட்ட அமைப்புகள் மற்றும் நவீன கால வடிவமைப்பு ஆகியவை வழமையான விமான நிறுவன சீருடைகளிலிருந்து மாறுபட்ட ஒரு தனித்துவமான தோற்றத்தை உருவாக்குகின்றன. 

Vietjet அடையாளமான சிவப்பு நிறமானது வெறும் பணி ஆடையை விடவும் மேலாக, வானில் அவ்விமானச் சேவையின் அடையாளத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக மாறியுள்ளதுடன்; இளமை, நட்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலத்தை நோக்கிய தொலைநோக்குச் சிந்தனை ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. 

Vietjet ஈர்ப்பு அதன் பலதரப்பட்ட onboard சேவைகளிலும் அமைந்துள்ளது. இதில் ஒன்பது வகையான புதிய, சத்தான சூடான உணவுகள், Vikkafe பானங்கள் மற்றும் duty-free பொருட்கள், பரிசுகள் மற்றும் பயணத்திற்கு அவசியமான பொருட்களுக்கான onboard கொள்வனவு வசதிகள் ஆகியவை அடங்கும். வியட்நாமின் வணிக மையமான Ho Chi Minh City ஐயும் கொழும்பையும் இணைக்கும் முதலாவது விமானச் சேவையிலிருந்து இலங்கைப் பயணிகள் இந்த onboard அனுபவத்தை அனுபவிக்க முடியும். 

Vietjet இன் நவீன, புதிய தலைமுறை விமானங்களுக்குள், இலக்குகளால் ஈர்க்கப்பட்ட இசை, சிறப்பு கலாச்சார மற்றும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இளைஞர்களான கவனமிக்க விமானப் பணிப்பெண்களின் இதமான சேவை ஆகியன மேகங்களுக்கு மேலேயான ஒவ்வொரு பயணத்திற்கும் கூடுதல் வண்ணத்தையும் ஆற்றலையும் சேர்க்கின்றன. 

Vietjet, AirlineRatings அமைப்பின் மிக உயர்ந்த ஏழு நட்சத்திர பாதுகாப்புத் தரவரிசையைத் தொடர்ந்து தக்கவைத்து வருவதுடன், பல வருடங்களாக உலகின் மிகவும் பாதுகாப்பான விமான நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு, சேவை, வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் வர்த்தகநாம மதிப்பு ஆகியவற்றிற்காக CAPA, Skytrax World Travel Awards மற்றும் பிற அமைப்புகளிடமிருந்தும் சர்வதேச அங்கீகாரங்களை அவ்விமான நிறுவனம் பெற்றுள்ளது. 

வியட்நாமில் இருந்து, Vietjet ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதிலும் ஐரோப்பாவின் புதிய சந்தைகளிலும் தனது சேவைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இலங்கைப் பயணிகளுக்காக, கொழும்புக்கும் Ho Chi Minh City க்கும் இடையே வாரத்திற்கு 3 round-trip விமானச் சேவைகளை வழங்குவதுடன், தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் இணைப்பு விமானச் சேவைகளையும் இவ்வழித்தடம் வழங்கும். 

வருடாந்தம் வழங்கப்படும் Flyers’ Choice Awards, முற்றிலும் பயணிகளால் மட்டுமே தீர்மானிக்கப்படும் ஒரே AirlineRatings விருதுகளாகும். 2026 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட சுமார் 40,000 சரிபார்க்கப்பட்ட வாக்குகளுடன், இந்த விருதுகள் பயணிகளின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வென்றெடுக்கும் விமான நிறுவனங்கள் பற்றிய நேரடிப் பார்வையை வழங்குகின்றன. 

இந்த இரண்டு புதிய கௌரவங்களும், Vietjet இன் ஒரு புதிய தலைமுறை வியட்நாமிய விமானச் சேவையிலிருந்து பாதுகாப்பு, நவீனத்துவம், தனித்துவம் மற்றும் உலகளாவிய ரீதியில் பயணிகளுடனான தனது வளர்ந்து வரும் பிணைப்பிற்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலகளாவிய விமான சேவை வர்த்தக நாமமாக உருவெடுத்துள்ள பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கின்றன. அந்தப் பிணைப்பு இப்போது இலங்கைக்கும் விரிவடைகிறது. 

Vietjet பற்றி: 

புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பைக் கொண்ட இருவகை விமானங்களையும் உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது. 

Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது. 

மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

Mobitel 1278