Header Logo
வணிகம்
Suzuki Motors Lanka மீண்டும் GN125 மொடலை அறிமுகப்படுத்தும் நிலையில், Haojue மோட்டார் சைக்கிள்கள் இலங்கை சந்தைக்கு மீள்வருகை

Aug 14, 2026 - 12:24 PM

Suzuki Motors Lanka மீண்டும் GN125 மொடலை அறிமுகப்படுத்தும் நிலையில், Haojue மோட்டார் சைக்கிள்கள் இலங்கை சந்தைக்கு மீள்வருகை
Mobitel Inner 1278

Softlogic Holdings PLC-இன் துணை நிறுவனமான சுசூகி மோட்டார்ஸ் லங்கா லிமிடெட் (Suzuki Motors Lanka Limited), தனது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கிணங்க இலங்கைக்கு ஹாவ்ஜூ (Haojue) மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே உங்களுக்குப் பிடித்த GN125 மீண்டும் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. 

முன்னதாக இலங்கை சந்தையில் அறிமுகமாகியிருந்த காலத்தில், GN125 மோட்டார் சைக்கிள் இலங்கை ஓட்டுநர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அன்றாடப் பயணங்களில் அதன் நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு/இயக்கச் செலவுகள் காரணமாக பலரின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது. GN125 மீண்டும் சந்தைக்கு வருவதுடன், Haojue வரிசையில் புதிதாக NK150 மற்றும் UHR150 ஆகிய இரண்டு மொடல்களும் இணைகின்றன. இதன் மூலம், இலங்கை சந்தையில் தனது நிலையை மீண்டும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் Haojue நிறுவனம், முன்பைவிட விரிவான மோட்டார் சைக்கிள் வரிசையை வழங்குகிறது. 

Haojue நிறுவனம், சீனாவில் Suzuki நிறுவனத்துடன் இணைந்து கூட்டு வர்த்தக முயற்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய இரு துறைகளிலும் சீன மோட்டார் சைக்கிள் தொழில்துறையில் முன்னணி வகித்து வருகிறது. மீண்டும் இலங்கை சந்தைப் பிரிவில் நுழையவுள்ள நிலையில், இந்த நீண்டகால செயல்திறன் Haojue நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் நீடித்த பயன்பாட்டுக்கான நாமத்தை மேலும் வலுப்படுத்துவதாக Suzuki Motors Lanka Limited தெரிவித்துள்ளது. “GN125 மோட்டார் சைக்கிள் இலங்கை சாரதிகளின் மனதில் தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. அதை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் எப்போதும் நம்பி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை, இப்போது Softlogic நிறுவனத்தின் வலிமை மற்றும் சேவைத் தரங்களின் ஆதரவுடன் மீண்டும் வழங்குகின்றோம் ,” என Suzuki Motors Lanka Limited நிறுவனத்தின் விற்பனை முகாமையாளர் திலின வன்னியாராச்சி தெரிவித்தார். 

இந்த மீள் அறிமுகமானது,தமக்கு பரிச்சயமான நாமத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிளை மீண்டும் பயன்படுத்த விரும்பும் முன்னாள் GN125 உரிமையாளர்களையும், அதன் நீடித்த பயன்பாட்டுக்கான நற்பெயரால் ஈர்க்கப்படும் புதிய தலைமுறையைச் சேர்ந்த அன்றாடப் பயணிகள், மாணவர்கள் மற்றும் முதல் முறையாக மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Haojue நிறுவனத்தின் நம்பகத்தன்மை என்ற பெயரிலிருந்து விலகாமல், செயல்திறனில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல விரும்பும் ஓட்டுநர்களை NK150 மற்றும் UHR150 மொடல்கள் இலக்காகக் கொண்டுள்ளன. 

இந்த மீள் அறிமுகமானது இலங்கையில் Haojue நிறுவனத்தின் இருப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நீண்டகால உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக Softlogic Automobiles தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, எதிர்வரும் மாதங்களில் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் வலையமைப்பை விரிவுபடுத்தும் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் அசல் உதிரிப் பாகங்களைப் பெறுவதற்கான வசதி ஆகியவை இந்த மீள் அறிமுகத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாகத் தொடரும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் Haojue வர்த்தகநாமத்தின் மீதான ஓட்டுநர்களின் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட நிறுவனம் எதிர்பார்க்கிறது. 

இந்த மீள் அறிமுகமானது Suzuki Motors Lanka Limited நிறுவனத்தின் தற்போதைய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு வரிசையுடன் மேலும் ஒரு புதிய சேர்க்கையாக அமைகிறது. அதேவேளை, இலங்கையின் இருசக்கர வாகன சந்தையில் Softlogic குழுமம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முதலீட்டையும் இது பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் அன்றாடப் பயணிகளால் தொடர்ந்து விரும்பப்படும் முக்கியமான போக்குவரத்து சாதனமாக இருசக்கர வாகனங்கள் இருந்து வருகின்றன. 

விலை, நிதியுதவி வசதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் நிலையங்களின் இருப்பிடங்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

Mobitel 1278