Aug 17, 2026 - 01:56 PM

Fabindia Sri Lanka தனது முதலாம் ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்தியாவின் வளமான கைவினைப் பாரம்பரியம், நிலைபேறான கைவினைத்திறன் மற்றும் காலத்தால் அழியாத வாழ்க்கை முறை அனுபவத்தை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்த ஒரு சிறந்த ஆண்டை இது குறிக்கிறது.
Swadeshi Industrial Works PLC நிறுவனத்துடனான கூட்டாண்மையுடன் Havelock City Mall இல் தனது முதன்மை அங்காடியை திறந்ததிலிருந்து, கலாசாரம், தரம் மற்றும் விழிப்புணர்வுடனான வாழ்க்கையைக் கொண்டாடுகின்ற உண்மையான, கைகளால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை தேடும் வாடிக்கையாளர்களால் Fabindia வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த அறிமுகமானது, இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் வாழ்க்கை முறை வர்த்தகநாமங்களில் ஒன்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியதுடன், நூற்றாண்டு கால பழமையான பாரம்பரிய கைவினைத்திறனால் ஈர்க்கப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், அணிகலன்கள் மற்றும் பரிசுகளை வழங்கி வருகிறது. கடந்த காலத்தில், Fabindia Sri Lanka ஒரு சில்லறை விற்பனை நிலையத்திற்கு அப்பால் வளர்ச்சியடைந்துள்ளது. பாரம்பரியமானது, நவீன வாழ்க்கையை சந்திக்கும் இடமாக இது உருவெடுத்துள்ளதுடன், இயற்கை ஆடைகள், நிலைபேறான நடைமுறைகள் மற்றும் அர்த்தமுள்ள பின்னணியைக் கொண்ட தயாரிப்புகளை மதிக்கும் வாடிக்கையாளர்களை இது ஈர்த்து வருகிறது.
இந்த முக்கிய தருணம் குறித்து சுதேசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சூலோதரா சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், "எமது முதலாவது ஆண்டு, கைவினைத்திறன், கலாசாரம் மற்றும் விழிப்புணர்வுடனான வாழ்வியலின் மூலம் தொடர்புகளை கட்டியெழுப்பிய ஒரு ஊக்கமளிக்கும் பயணமாக அமைந்தது. Fabindia நிறுவனத்தின் தத்துவத்தை தழுவிக்கொண்டமை தொடர்பில் எமது வாடிக்கையாளர்கள், பங்காளர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள எமது குழுவினருக்கு நாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மைல்கல்லைக் கொண்டாடும் இவ்வேளையில், உண்மையான, பொறுப்புடன் தயாரிக்கப்பட்ட மற்றும் காலத்தால் அழியாத ஈர்ப்பைக் கொண்ட தயாரிப்புகளை வழங்க நாம் தொடர்ச்சியாக உறுதியளிவிக்கிறோம்." எனக் குறிப்பிட்டார்.
கைவினை கலைஞர்களின் சமூகங்களுக்கு ஊக்கமளித்தல், பாரம்பரிய திறன்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலைபேறான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்தல் ஆகிய Fabindia நிறுவனத்தின் தத்துவம், நோக்கம் கொண்ட தயாரிப்புகளைத் தேடும் நுகர்வோரிடையே தொடர்ச்சியான வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கையால் செய்யப்பட்ட ஆடை, வீட்டு அலங்காரப் பொருள் மற்றும் வாழ்க்கை முறைத் தொகுப்புகள் மூலமாகவும், இந்த வர்த்தகாநமம் நவீன நேர்த்தியை தழுவி பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான தனது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த முதலாம் வருட நிறைவானது, விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. அவர்களின் தொடர்ச்சியான ஆதரவே Fabindia Sri Lanka நிறுவனத்தின் கூட்டாண்மையின் வெற்றிக்கும், பாரம்பரியத்தை நவீன பாணியுடன் இணைக்கும் ஒப்பிட முடியாத தயாரிப்புகளை வழங்கும் அதன் பயணத்திற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
1960ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Fabindia ஆனது, இந்தியாவின் முன்னணியில் உள்ள வாழ்க்கை முறை வர்த்தகநாமங்களில் ஒன்றாகும். இது 55,000 இற்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களையும் விவசாயிகளையும் நவீன சந்தைகளுடன் இணைக்கிறது. பாரம்பரிய கைவினைத்திறன், நிலைபேறான ஆதாரங்கள், இயற்கை பொருட்கள் மற்றும் இந்தியப் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்தும் தயாரிப்புகளின் அர்ப்பணிப்புக்காக இந்த வர்த்தகநாமம் புகழ்பெற்று விளங்குகின்றது.
இந்நிகழ்வைக் கொண்டாடும் வகையில், இந்த விற்பனை நிலையமானது பிரத்தியேக வருட நிறைவு சலுகைகள், விசேட புதிய தயாரிப்புகள் மற்றும் அற்புதமான கொள்வனவு அனுபவங்களை வழங்குகிறது. இதன் மூலம் கைகளால் ஆக்கப்பட்ட வாழ்வியல் பொருட்களின் அழகை மீளக்கண்டறிவதற்கான வாய்ப்பை பெறுமாறு வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் அழைப்பு விடுக்கிறது.
Fabindia Sri Lanka தனது இரண்டாவது வருடத்தில் காலடி வைக்கும் இத்தருணத்தில், விழிப்புணர்வுடனான வாழ்வியலைத் தொடர்ச்சியாக ஊக்குவிப்பதன் மூலமும், கைவினைத்திறனைக் கொண்டாடுவதன் மூலமும், பாரம்பரியத்தை நவீன பாணியுடன் இணைக்கும் ஒப்பிட முடியாத தயாரிப்புகளை வழங்குவதன் மூலமும் இலங்கை நுகர்வோருடனான உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கிறது.























