Header Logo
SLIC
Rhythams of Lanka
வணிகம்
உலகளாவிய பயன்பாட்டிற்காக இலங்கையில் உருவாக்கப்பட்ட TapID உறவு முகாமைத்துவத் தளத்தை Synapseus Technologies அறிமுகப்படுத்துகிறது

Aug 17, 2026 - 01:59 PM

உலகளாவிய பயன்பாட்டிற்காக இலங்கையில் உருவாக்கப்பட்ட TapID உறவு முகாமைத்துவத் தளத்தை Synapseus Technologies அறிமுகப்படுத்துகிறது
Mobitel Inner 1278

ஒரு வலையமைப்பு நிகழ்வில் அறிமுகமாகும் ஒருவர், அடுத்த சில நாட்களில் மீண்டும் தொடர்புகொள்ளப்படாமல் போகலாம். பரிமாறிக்கொள்ளப்படும் வர்த்தக அட்டைகள் சில நாட்களுக்குப் பின்னர் ஒரு இழுப்பறையில் கிடக்கலாம். இதுபோன்ற காரணங்களால், ஆரம்பத்தில் உருவாகும் பல மதிப்புமிக்க தொழில்முறை தொடர்புகளும் வர்த்தக வாய்ப்புகளும் தொடர்ந்து வளராமல் போகின்றன. 

இந்தச் சவாலுக்கு தீர்வாக, Synapseus Technologies இலங்கையில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் வர்த்தக அட்டை மற்றும் உறவு முகாமைத்துவத் தளமான TapID-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

பாரம்பரிய NFC வர்த்தக அட்டையைத் தாண்டி, புதிய தொடர்புகளை உருவாக்குவது முதல் அவற்றை தொடர்ந்து பேணுவது வரை முழுமையான வலையமைப்பு அனுபவத்தை வழங்கும் வகையில் TapID உருவாக்கப்பட்டுள்ளது. TapID மூலம், பயனர்கள் தமது NFC அட்டையை ஒரு ஸ்மார்ட்போனுடன் தொட்டு (Tap), தங்களது டிஜிட்டல் சுயவிவரத்தை உடனடியாகப் பகிர முடியும். தொடர்பு விவரங்களை கைமுறையாக உள்ளிட வேண்டிய அவசியமின்றி, அவற்றை உடனடியாகச் சேமிக்கவும் முடியும். 

ஆனால் TapID-ன் பயன்பாடு ஒரு தொடர்பைப் பகிர்வதுடன் முடிவடைவதில்லை. ஒரு புதிய தொடர்பை எப்போது சந்தித்தோம், என்ன பேசினோம், அடுத்து என்ன செய்ய வேண்டும் போன்ற தகவல்களைப் பதிவு செய்யவும், நினைவூட்டல்களை அமைக்கவும், தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் இந்தத் தளம் உதவுகிறது. மேலும், பயனர்கள் தமது வலையமைப்பு வரலாற்றை எளிதாகத் தேடிப் பார்க்கவும் பகிரவும் முடியும். நிறுவனங்களுக்கு, குழு உறுப்பினர்களின் தொடர்பு நடவடிக்கைகள் மற்றும் செயல்திறனைப் புரிந்துகொள்ள உதவும் பகுப்பாய்வு வசதிகளும் TapID-ல் உள்ளன. 

இலங்கை பயனர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட TapID, தற்போது ஆங்கிலம், சிங்களம், தமிழ் மற்றும் அரபு ஆகிய நான்கு மொழிகளை ஆதரிக்கிறது. எதிர்காலத்தில் மேலும் பல மொழிகளைச் சேர்க்கும் திட்டமும் உள்ளது. 

“ஒவ்வொரு வர்த்தக வாய்ப்பும் ஒரு எளிய உரையாடலிலிருந்துதான் தொடங்குகிறது. ஆனால், அந்த உரையாடலுக்குப் பிறகு சரியான நேரத்தில் தொடர்ந்து தொடர்புகொள்வது பல நேரங்களில் சவாலாக இருக்கிறது. மதிப்புமிக்க தொடர்புகள் இவ்வாறு தொலைந்து போகும் இடைவெளியை நிரப்புவதற்காகவே TapID உருவாக்கப்பட்டது. 

தனிநபர்கள் தங்களது தொழில்முறை வலையமைப்பை சிறப்பாக நிர்வகிக்கவும், நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக தொடர்புகளுடன் நீண்டகால உறவுகளை உருவாக்கவும் உதவுவதே எமது நோக்கம். வலையமைப்பிற்குத் தேவையான பல்வேறு கருவிகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், தொடர்புகளை உருவாக்குவதையும் தொடர்ந்து பேணுவதையும் TapID எளிதாக்குகிறது. 

உலகளாவிய பயன்பாட்டிற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை இலங்கையிலேயே உருவாக்க முடியும் என்பதையும், சர்வதேச சந்தையில் போட்டியிடக்கூடிய தயாரிப்புகளை இலங்கையிலிருந்து உருவாக்கும் திறன் எம்மிடம் உள்ளது என்பதையும் TapID எடுத்துக்காட்டுகிறது,” என்று Synapseus Technologies நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான மிலிந்த லொகுகே தெரிவித்தார். 

TapID ஒரு NFC வர்த்தக அட்டையை விட அதிகமான வசதிகளை வழங்கும் முழுமையான தொழில்முறை வலையமைப்பு தளமாகும். இருவழித் தொடர்பு, உள்ளமைக்கப்பட்ட வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவம், நிகழ்நேர பகுப்பாய்வு மற்றும் 24-7-30 தொடர் பின்தொடர்தல் முறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு சந்திப்பிற்குப் பின்னரும் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள பயனர்களுக்கு உதவுகிறது. 

தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள TapID, தொழில்முறையாளர்கள் தமது தொடர்பு வலையமைப்பை விரிவுபடுத்த உதவுவதுடன், நிறுவனங்கள் தமது குழுக்களுக்கான ஒரே மாதிரியான வர்த்தகநாம அடையாளத்தைப் பேணவும், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் பின்தொடர்தல் நடவடிக்கைகளை மேலும் திறம்பட நிர்வகிக்கவும் உதவுகிறது. 

TapID உயர்தர NFC தயாரிப்புகளின் தொகுப்பையும் வழங்குகிறது. இதில் NFC வர்த்தக அட்டைகள், QR குறியீடுகள், NFC நாணய வடிவிலான ஸ்டிக்கர்கள் மற்றும் 6 மில்லிமீட்டர் அளவிலான சிறிய NFC ஸ்டிக்கர்கள் ஆகியவை அடங்கும். இயற்கை மரம் மற்றும் மெருகூட்டப்பட்ட உலோகம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தியான வடிவமைப்புகளில் இவை கிடைக்கின்றன. 

TapID மொபைல் செயலியாகவும் கிடைக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களது தகவல்களை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் உடனடியாகப் புதுப்பிக்க முடியும். இலங்கை ரூபாயில் (LKR) கட்டணம் செலுத்தும் வசதியுடன் கூடிய நெகிழ்வான சந்தா திட்டங்களும் வழங்கப்படுகின்றன. 

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளும் TapID மூலம் வழங்கப்படுகின்றன. பரிந்துரை வெகுமதித் திட்டங்களும் இதில் அடங்குகின்றன. 

மேலும் தகவல்களுக்கு: https://thetapid.com 

NFC வர்த்தக அட்டைகள் பற்றி 

NFC (அண்மைத் தகவல் தொடர்பு – Near Field Communication) வர்த்தக அட்டைகள், ஸ்மார்ட்போனை அட்டையுடன் ஒருமுறை தொட்டு (Tap) தொடர்பு விவரங்களைப் பகிரும் வசதியை வழங்குகின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு தனியாக எந்தவொரு செயலியையோ மென்பொருளையையோ நிறுவ வேண்டிய அவசியமில்லை. பயனர்கள் தங்களது டிஜிட்டல் சுயவிவரத்தை எளிதாகப் பகிர்வதுடன், தொடர்பு விவரங்களைச் சேமிக்கவும் முடியும். 

மேலும், நிகழ்நேர சுயவிவரப் புதுப்பிப்புகள், பயன்பாட்டு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் வலையமைப்பு வசதிகள் போன்ற அம்சங்களையும் NFC வர்த்தக அட்டைகள் வழங்குகின்றன. 

Synapseus Technologies பற்றி 

Synapseus Technologies என்பது இலங்கையைத் தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமாகும். நிறுவனங்கள் தமது செயல்பாடுகளை நவீனமயமாக்குவதற்காக ERP (நிறுவன வளத் திட்டமிடல் – Enterprise Resource Planning) அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தானியக்கத் தீர்வுகள் மற்றும் தனிப்பயன் டிஜிட்டல் தளங்களை வழங்குவதில் இந்நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளது. 

TapID என்பது Synapseus Technologies நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பாகும். இலங்கையில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத் தீர்வுகளை உலகளாவிய சந்தைக்கு கொண்டு செல்வதே நிறுவனத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.


MOST READ

காணொளி
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

Mobitel 1278