Header Logo
SLIC
Rhythams of Lanka
வணிகம்
DIMO Agri Machinery Prestige Awards 2025/26 சிறந்த விநியோகஸ்தர் கௌரவிப்பு

Aug 17, 2026 - 03:44 PM

DIMO Agri Machinery Prestige Awards 2025/26 சிறந்த விநியோகஸ்தர் கௌரவிப்பு
Mobitel Inner 1278

DIMO நிறுவனம் அண்மையில் மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில், ‘DIMO Agri Machinery Prestige Awards 2025/26’ விருது வழங்கும் விழாவை முன்னெடுத்திருந்தது. இதில் விற்பனை, உதிரிப் பாகங்கள் மற்றும் சேவை ஆகிய பிரிவுகளில் தமது நாடளாவிய விவசாய இயந்திர விநியோகஸ்தர் வலையமைப்பிலுள்ள சிறந்த சாதனைகளை நிறுவனம் கொண்டாடியது. இலங்கை விவசாயத் துறையைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தி வரும் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் அர்ப்பணிப்பு, செயல்திறன் மற்றும் உறுதிப்பாட்டை கௌரவிக்கும் வகையில் அமைந்த இந்த மதிப்புமிக்க விருது வழங்கும் விழா, DIMO நிறுவனத்தின் மதிப்புமிக்க விநியோகஸ்தர்கள், பங்காளிகள், முதன்மை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் ஆகியோரை ஒன்றிணைத்தது. 

விவசாயத் துறைக்கான DIMO நிறுவனத்தின் முதன்மையான விநியோகஸ்தர் அங்கீகாரத் தளமாக விளங்கும் DIMO Agri Machinery Prestige Awards நிகழ்வானது, நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் ஒருவருக்கொருவர் பகிரும் வெற்றி மூலம் கட்டியெழுப்பப்பட்ட நீண்டகால கூட்டாண்மைகளை வளர்ப்பதில் நிறுவனத்தின் மாறா அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்நிகழ்வானது நாடளாவிய விற்பனை, விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் உதிரிப் பாகங்கள் வலையமைப்பை வலுப்படுத்தியதோடு, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கிய விநியோகஸ்தர்களுக்கு கௌரவமளித்தது. 

இந்த வருடத்தின் வெற்றியாளர்களில், A. விக்னேஸ்வரன் பிரதிநிதித்துவப்படுத்திய வவுனியா Kavin Motors ஆனது விற்பனைப் பிரிவில் வெற்றி பெற்றது. N.P.L. குணவர்தன பிரதிநிதித்துவப்படுத்திய ரம்பேவ, A.V.P. Motors ஆனது உதிரிப் பாகங்கள் பிரிவில் விருதைப் பெற்றது. அத்துடன், நடராஜ் புவனேஸ்வரன் பிரதிநிதித்துவப்படுத்திய வவுனியா MF Tractor Works ஆனது ஒப்பிட முடியாத வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை விசேடத்துவத்திற்காக, சேவை வழங்கல் பிரிவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

DIMO மற்றும் Mahindra Tractors இடையே உள்ள 35 ஆண்டுகால கூட்டாண்மையையும் இந்த விழா கொண்டாடியது. புத்தாக்கம், தரம் மற்றும் வாடிக்கையாளர் வெற்றி எனும் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நீண்டகால ஒத்துழைப்பு இதுவாகும். கடந்த மூன்றரை தசாப்தங்களாக, உலகத்தரம் வாய்ந்த விவசாயத் தீர்வுகளின் மூலம் இலங்கையில் விவசாய இயந்திரமயமாக்கலை முன்னேற்றுவதில் இந்தக் கூட்டாண்மை முக்கிய பங்காற்றியுள்ளது. இந்நிகழ்வில் புத்தம் புதிய Mahindra OJA Tractor மற்றும் LOVOL RG102 Pro Harvester ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டு, DIMO நிறுவனத்தின் விவசாய இயந்திர தயாரிப்புகளின் வரிசையை மேலும் வலுப்படுத்தின. இந்த மேம்பட்ட இயந்திரங்களின் அறிமுகமானது, உற்பத்தித்திறனை அதிகரித்தல், செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை விவசாயிகளின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் புத்தாக்கமான, உயர் செயல்திறன் கொண்ட தீர்வுகளை வழங்குவதற்கான DIMO நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

இந்நிகழ்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே, எமது விநியோகஸ்தர் வலையமைப்பானது நீண்ட காலமாக DIMO Agri Machinery நிறுவனத்தின் வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது. DIMO Agri Machinery Prestige Awards ஆனது இலங்கையின் விவசாய சமூகத்திற்குச் சேவையாற்றுவதில் எமது பங்காளிகள் காட்டிய ஆர்வம், நெகிழ்வுத் தன்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கொண்டாட்ட நிகழ்வாகும். மஹிந்திரா OJA உழவு இயந்திரம் மற்றும் LOVOL RG102 Pro அறுவடை இயந்திரம் போன்ற உலகத்தரம் வாய்ந்த விவசாயத் தொழில்நுட்பங்களை நாம் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வரும் வேளையில், இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும், புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தீர்வுகள் மூலம் விவசாயத் துறையை வலுவூட்டுவதற்கும் நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உள்ளோம். ஒன்றிணைந்து, எமது வாடிக்கையாளர்கள், பங்காளிகள் மற்றும் நாம் சேவை ஆற்றும் சமூகங்களுக்கு அதிக மதிப்பை உருவாக்குவதன் மூலம் கனவுகள் மற்றும் இலட்சியங்களை வலுவூட்டுவதை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார். 

DIMO Agri Machinery Prestige Awards 2025/26 மூலம், விசேடத்துவங்களை அங்கீகரிப்பதற்கும், நீண்டகால கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும், நவீன விவசாயத் தொழில்நுட்பங்களை தழுவிக் கொள்வதை விரைவுபடுத்துவதற்குமான தனது அர்ப்பணிப்பை DIMO நிறுவனம் மீள உறுதிப்படுத்தியுள்ளது. நம்பகமான கூட்டாண்மைகள், புத்தாக்கமான தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் வெற்றியில் மாறாத கவனத்தை செலுத்துவதன் மூலம், இலங்கை விவசாய சமூகத்தை தொடர்ச்சியாக வலுவூட்டுவதுடன், விவசாய இயந்திரமயமாக்கலின் எதிர்காலத்தையும் DIMO நிறுவனம் வடிவமைத்து வருகிறது.


MOST READ

காணொளி
ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

Mobitel 1278