Aug 19, 2026 - 07:05 AM





ஓகஸ்ட் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவு இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபாய் தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரத்து 500 ரூபாய் தொகையை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

























