Aug 19, 2026 - 07:22 PM





கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலித் தகவலை வௌியிட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (19) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் நேற்று (18) கைது செய்யப்பட்டிருந்தார்.
கைதான சந்தேகநபர் பெல்லன்வில, பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

























