Aug 20, 2026 - 11:43 AM





றிச்சர்ட் பீரிஸ் செக்கியுரிட்டீஸ் (பிரைவட்) லிமிடெட், தனது அடுத்த கட்ட வளர்ச்சியை முன்னெடுப்பதற்காகவும், நம்பிக்கையான மற்றும் நிபுணத்துவமான பங்குமுகவர் சேவைகளை நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதை உறுதி செய்யும் வகையிலும், தனது தலைமைத்துவத்தை வலிமைப்படுத்தியுள்ளது.
பங்குத் தரகு மற்றும் முதலீட்டுச் சேவைகளில் பரந்த அனுபவத்தைக் கொண்டுள்ள முக்கிய முகாமைத்துவப் பணியாளர்களை நிறுவனம் வரவேற்றுள்ளது. இப் பணியமர்த்தல்கள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், கொழும்பு பங்குச் சந்தையானது (CSE) றிச்சர்ட் பீரிஸ் செக்கியுரிட்டீஸ் நிறுவனத்தின் வர்த்தகச் செயல்பாடுகளை இடைநிறுத்துவதற்கு எடுக்கவிருந்த தீர்மானத்தை விலக்கிக் கொண்டுள்ளதுடன், அப் பங்குத் தரகு நிறுவனம் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடர அனுமதித்துள்ளது.
றிச்சர்ட் பீரிஸ் செக்கியுரிட்டீஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியின் பணியமர்த்தலை முதன்மையாகக் கொண்டு, இந்த வலுவாக்கப்பட்ட தலைமைத்துவக் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய முகாமைத்துவப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ள அனுபவம் வாய்ந்த தொழில்வல்லுனர்களும் இதற்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். இது நிறுவனத்தின் ஆளுகை, ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான உயர் தரங்களை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துகிறது.
தனது முழுமையான சேவை வரிசையைத் தொடர்வதில் நிறுவனத்தின் தளராத அர்ப்பணிப்புடன், றிச்சர்ட் பீரிஸ் செக்கியுரிட்டீஸின் வலுவாக்கப்பட்ட தலைமைத்துவம், இலங்கையின் மூலதனச் சந்தையில் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ச்சியான வழிகாட்டலையும் தொழில்முறை ஆதரவையும் வழங்குவதில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
17,000 ஊழியர்களைக் கொண்டு இயங்கும், இலங்கையின் நீண்ட பாரம்பரியமிக்க மற்றும் மதிப்பிற்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான றிச்சர்ட் பீரிஸ் குரூப் (ஆர்பிகோ) இந்நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளது. றிச்சர்ட் பீரிஸ் செக்கியுரிட்டீஸ் நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட தலைமைத்துவம் மற்றும் நீண்டகால வளர்ச்சி இலக்குகளுடன் முன்னோக்கிச் செல்லும்போது, இந்த ஆதரவானது அதற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.
இந்த முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த ரிச்சர்ட் பீரிஸ் செக்கியுரிட்டீஸ் நிறுவனத்தின் முகாமைத்துவத் தரப்பு, “ஒரு வலுவாக்கப்பட்ட குழு மற்றும் தொழில்முறை, நேர்மை மற்றும் நம்பிக்கையுடன் எமது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கான தெளிவான அர்ப்பணிப்புடன் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆளுகை மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் ஆகியவற்றின் மிக உயர்ந்த தரங்களைப் பேணுவதுடன், ஒரு வலுவான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் எமது கவனம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. றிச்சர்ட் பீரிஸ் குரூப்பின் ஆதரவு மற்றும் எமது புதிய தலைமைத்துவக் குழுவின் அனுபவத்துடன், எமது வாடிக்கையாளர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.” எனக் குறிப்பிட்டுள்ளது.
தமது நிறுவனம் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து வரும் வாடிக்கையாளர்கள், வணிகக் பங்காளர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருக்கு றிச்சர்ட் பீரிஸ் செக்கியுரிட்டீஸ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் வலுவாக்கப்பட்ட அடித்தளத்துடன், முதலீட்டாளர்களுடன் நீடித்த உறவுகளைக் கட்டியெழுப்பவும் நம்பகமான பங்குத் தரகுச் சேவைகளை வழங்கவும் றிச்சர்ட் பீரிஸ் செக்கியுரிட்டீஸ் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இயங்குகிறது.

























