Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
கல்கிசை துப்பாக்கிச் சூடு - மேலும் இருவர் கைது

Aug 21, 2026 - 07:55 AM

கல்கிசை துப்பாக்கிச் சூடு - மேலும் இருவர் கைது
Mobitel Inner 1278
EDEX Inner

கல்கிசை, ஹுளுதாகொட வீதிப் பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஒத்தாசை வழங்கிய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கல்கிசைக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 15 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இந்த கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், குறித்த கொலை தொடர்பில் கல்கிசைக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

குறித்த விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், இந்த இரு சந்தேக நபர்களும் நேற்றுமுன்தினம் (19) இரவு கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பிள்ஸ் வீதிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் 20 மற்றும் 23 வயதுடைய கல்கிசைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவர்களில் ஒரு சந்தேக நபர் 2025.05.05 அன்று கல்கிசை, சில்வெஸ்டர் வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி மனிதக் கொலை ஒன்றை புரிந்த குற்றத்திற்கும் உதவி ஒத்தாசை வழங்கியவர் என்பது தெரியவந்துள்ளது. 

இதற்கமைவாக, இந்தக் குற்றம் தொடர்பில் இதுவரை பிரதான சந்தேக நபர், பெண் சந்தேக நபர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் 110 நாட்கள் அகழ்வாராய்ச்சியில் 583 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

பாராளுமன்றில் நன்றிக் கடன் தீர்த்த அர்ச்சுனா!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

மாளிகை போன்ற ஒரு வீட்டை கட்டி இருக்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

கொள்கை ரீதியான முடிவை தான் எதிர்பார்க்கின்றோம்!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

இடமாற்றம் ஒரு தீர்வு கிடையாது!

Mobitel 1278