Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 93,635 ஆக உயர்வு

Aug 22, 2026 - 04:17 PM

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 93,635 ஆக உயர்வு
Mobitel Inner 1278
EDEX Inner

இவ்வாண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 93,635 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை 71 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, நாடு முழுவதிலும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்து அதிஅபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளன.

நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளிகளில் பாதியளவிற்கும் அதிகமானோர், அதாவது 52.94% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். தென் மாகாணத்தில் 13,719 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 8,476 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 19,945 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதர மாவட்டங்களாக கொழும்பில் 18,588 பேரும், கண்டியில் 6,786 பேரும், மாத்தறையில் 6,082 பேரும், களுத்துறையில் 6,059 பேரும், காலியில் 5,133 பேரும், இரத்தினபுரியில் 4,981 பேரும் பதிவாகியுள்ளனர்.

மாதாந்த அடிப்படையில், ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,964 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 நோயாளிகளும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 21 நாட்களில் 8,297 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278