Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்த வயதெல்லை 40 ஆக அதிகரிக்கப்படும்

Aug 23, 2026 - 05:06 PM

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்த வயதெல்லை 40 ஆக அதிகரிக்கப்படும்
Mobitel Inner 1278
EDEX Inner

முச்சக்கர வண்டிகளைச் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். 

பாடசாலைக் கல்வியை முடித்த உடனேயே இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்குச் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

மேலும், நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கையிலேயே தங்கியுள்ளது என்றும், அபிவிருத்தியடைந்த மனித வளத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற முடியும் என்றும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே சுட்டிக்காட்டுகிறார். 

அதற்கமைய, ஒரு அரசாங்கமாக மனித வள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய கல்விச் சீர்திருத்தங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, 

எமது நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கையிலேயே உள்ளது. அபிவிருத்தியடைந்த மனித வளமே என்றாவது ஒருநாள் இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும். ஒரு அரசாங்கமாக நாம் மனித வள மேம்பாட்டிற்கே முன்னுரிமை அளிக்கிறோம். 

அதற்காகவே கல்விச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம். 

இந்த கல்வியில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என நாம் நம்புகிறோம். 

எதிர்காலத்தில் முச்சக்கர வண்டி செலுத்தும் வயதையும் 40 ஆக உயர்த்த எதிர்பார்க்கிறோம். 

பாடசாலை சென்று முடிந்த உடனேயே முச்சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வர முடியாது எனக் கூறினார்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278