Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
வனாத்தே சதுவின் உதவியாளர் வீட்டிற்கு கைக்குண்டு தாக்குதல்

Aug 23, 2026 - 03:44 PM

வனாத்தே சதுவின் உதவியாளர் வீட்டிற்கு கைக்குண்டு தாக்குதல்
Mobitel Inner 1278
EDEX Inner

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் அமைந்துள்ள 141 ஆம் தோட்டத்தில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

டுபாயில் கைது செய்யப்பட்ட 'வனாத்தே சது' எனப்படும் திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் உதவியாளர் ஒருவரது வீட்டின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், அந்த கைக்குண்டு வெடிக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று (23) முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, சந்தேகநபர் மோட்டார் சைசைக்கிளில் பிரவேசித்து கைக்குண்டை வீசிச் செல்லும் காட்சி அருகிலிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. 

குறித்த பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களுக்கு இடையே இவ்வாறு கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தும் புதிய போக்கு தற்போது அதிகரித்து வருவதாகப் பாதுகாப்புப் படையினர் சுட்டிக்காட்டுகின்றனர். 

கடந்த நாட்களிலும் இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியிலுள்ள வீடொன்றின் மீதும் இவ்வாறு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில், அதில் ஒரு குண்டு வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278