Header Logo
SLIC
செய்திகள்
போதைப்பொருள் சட்டத்தில் புதிய திருத்தம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Aug 25, 2026 - 08:37 AM

போதைப்பொருள் சட்டத்தில் புதிய திருத்தம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
Mobitel Inner 1278
EDEX Inner

விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவுக்கு அமைவாக நேற்று (24) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சட்டமூலத்தின் மூலம் விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சில புதிய யோசனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த கட்டளைச் சட்டத்தின் 54ஆவது பிரிவின் முதலாவது உப பிரிவில் காணப்பட்ட ஹெரோயின், கொக்கேய்ன், மோஃபின், அபின் ஆகிய சொற்களுக்கு மேலதிகமாக, 'மெத்தம்பெட்டமைன்' (Methamphetamine) என்ற சொல்லும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, அரச பகுப்பாய்வாளரினால் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பிலும், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பிலும் இந்தச் சட்டமூலத்தின் மூலம் புதிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் குற்றவாளி ஒருவரைக் கைது செய்யும்போது புலனாய்வு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் இந்தச் சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278