Aug 27, 2026 - 08:35 AM





தலைமன்னார் - ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (26) காலை 9.30 மணியளவில் கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் தலைமன்னார் பியர் பகுதியை சேர்ந்த 28 வயமான 2 பிள்ளைகளின் தாயார் என்பது தெரிய வந்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட உயிரிழந்த பெண்ணின் 32 வயதுடைய கணவர் தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் வைத்து தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குறித்த பெண்ணிற்கு 7 மற்றும் 10 வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்த நிலையில், அண்மையில் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபரிடம் தலை மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.























