Header Logo
SLIC
சினிமா
பாக்ஸ் ஆபிசில் 'டாக்சிக்' மாபெரும் வசூல் வேட்டை!

Aug 27, 2026 - 09:48 AM

பாக்ஸ் ஆபிசில் 'டாக்சிக்' மாபெரும் வசூல் வேட்டை!
Mobitel Inner 1278
EDEX Inner

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்சிக்' திரைப்படம் கலவையான மற்றும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றபோதிலும், திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது. 

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் அதிரடித் திரைப்படம் 'டாக்சிக்'. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு யாஷ் திரைக்கு திரும்பியுள்ளதால் ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. 

திரையரங்குகளில் படம் வெளியான பிறகு, திரைக்கதையில் தெளிவின்மை மற்றும் இரண்டாம் பாதியில் அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும், யாஷின் கம்பீரமான நடிப்பு மற்றும் மாஸ் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்து, முதல் நாளிலேயே திரையரங்குகளை நிரப்பச் செய்துள்ளது. 

திரையரங்கு வசூலில் எதிர்மறை விமர்சனங்களை முறியடித்து முதல் நாளில் இந்திய அளவில் 60 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது. முன்பதிவு மற்றும் முதல் நாள் காட்சிகளின் மூலம் பல கோடி வசூலித்து, இந்தி உட்பட பல மொழிகளில் ஷாருக்கானின் 'பதான்' திரைப்படத்தின் ஆரம்ப நாள் வசூல் வேகத்தை முறியடித்துள்ளது. 

குறிப்பாக இந்தி மற்றும் கன்னட பதிப்புகளில் இப்படம் அதிக அளவிலான வசூலை ஈட்டியுள்ளது. கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விடியற்காலை காட்சிகளிலேயே 80%க்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பி சாதனை படைத்தன. 

இத்திரைப்படம் புதன்கிழமை அன்று வெளியானதால், தொடர்ந்து வரவிருக்கும் தொடர் அரசு விடுமுறை நாட்கள் வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளின் முடிவில் உலகம் முழுவதிலும் இருந்து இப்படம் 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278