Header Logo
சினிமா
இரசிகரால் கடத்தப்பட்டேன்!

Aug 31, 2026 - 02:03 PM

இரசிகரால் கடத்தப்பட்டேன்!
Mobitel Inner 1278

கேப்டன் விஜயகாந்துடன் 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, தனது கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் பேரழகாலும் தென்னிந்திய ரசிகர்களைச் சுண்டி இழுத்தவர் நடிகை நமீதா. 

ஏய், சாணக்யா, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா என அடுத்தடுத்து பிளாக்பாஸ்டர் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்த நமீதா, திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கிறார். 

தற்போது யூடியூப் சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டியளித்து வரும் நமீதா, 

சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னை தீவிர ரசிகர் ஒருவர் கடத்திய சம்பவத்தை பேசி உள்ளார். 

திருச்சியில் ஒரு படப்பிடிப்பிற்காக சென்று இருந்தேன். அப்போது என்னை அழைத்து செல்ல வந்ததாக கூறி ஒருவர் காருடன் வந்தார். அவரை அமைப்பாளர்கள் அனுப்பிய ஆள் என்று நம்பி நானும் காரில் ஏறினேன். 

காரில் ஏறியதும் வழக்கம்போல் ஹெட்போனை மாட்டி பாடல் கேட்டு கொண்டே கண்ணை மூடி வந்தேன். கார் எங்கே செல்கிறது என்பதை நான் கவனிக்கவே இல்லை. சிறிது தூரம் கார் சென்றதும், திடீரென பொலிஸார் காரை நாலாபுறமும் சுற்றி வளைத்தனர். 

கார் நின்றதும் அந்த நபர் என்னிடம், 'நமீதா, நீங்க காரை விட்டு வெளியே வராதீங்க, உள்ளேயே இருங்க' என்று கூறினார். எனக்கு ஒரே பதற்றம். என்ன ஆச்சு, ஒருவேளை ஷூட்டிங் எதுவும் நடக்குதா, கேமரா எங்கே இருக்கிறது என்று சுற்றிலும் பார்த்தேன். 

அப்போது ஒரு பெண் பொலிஸாரின் கதவை திறந்து என் கையை பிடித்து வெளியே இழுத்தார். நான் என்ன ஆச்சு என்று கேட்ட போதுதான், 'மேடம், உங்களைக் கடத்திட்டாங்க' என்று சொன்னார்கள். அதைகேட்டு நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோனேன் தனைக் கடத்திய அந்த நபரை பொலிஸார் கைது செய்து அழைத்து செல்லும்போது கூட, அவன் சிரித்துக்கொண்டே "ஐ லவ் யூ நமீதா" என்று கத்திக் கொண்டே போனார். 

தனது வாழ்க்கையில் நடந்த இந்த விபரீதமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவத்தை என்னால் வாழ்க்கையிலேயே மறக்கவே முடியாது என நமீதா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

Mobitel 1278