Header Logo
SLIC
செய்திகள்
களு கங்கையில் மாயமான சஸ்மித!

Sep 1, 2026 - 09:30 AM

களு கங்கையில் மாயமான சஸ்மித!
Mobitel Inner 1278
EDEX Inner

ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

நண்பர்கள் மூவரில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறு காணாமல் போனவர் யால பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சிராத் சஸ்மித என்ற இளைஞராவார்.

 

நேற்று (31) மாலை 7.30 மணியளவில் நீராடுவதற்காக இந்த இடத்திற்கு வந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் ஆற்றில் குதித்து நீந்த முயன்ற போது, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதன்போது, அவரைப் காப்பாற்றுவதற்காக மற்றொரு இளைஞரும் ஆற்றில் குதித்துள்ளார்.

 

காப்பாற்றச் சென்ற நபரும் நீரோட்டத்தில் சிக்கிய போதிலும், அவர் கடும் போராட்டத்திற்குப் பிறகு கரை சேர்ந்துள்ளார்.

 

பின்னர் இது குறித்து ஹொரணை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

களு கங்கையின் நீரோட்டம் அதிகமாக உள்ள பகுதியாக இது விளங்குவதால், இன்று (01) காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் உயிர் பாதுகாப்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

 

மேலும், அந்தப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதால், கரையோரத்தில் தீ மூட்டிப் பாதுகாப்பைப் பலப்படுத்தப் பிரதேசவாசிகளும் அவரது நண்பர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278