Sep 1, 2026 - 10:35 AM





பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகளைக் காணவில்லை எனப் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (31) தனியார் வகுப்பிற்குச் சென்ற வேளையிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளதாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போனவர்கள் பலாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய கௌசல்யா, 17 வயதுடைய சர்மிளா மற்றும் 17 வயதுடைய சதுனி ஆகிய மாணவிகளாவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர்களைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகப் பலாங்கொடை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கம் (045-2287222) அல்லது பெற்றோரின் தொலைபேசி இலக்கங்களிற்கு (076-7070913 / 077-1658788) தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























