Sep 1, 2026 - 11:03 AM





தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) ஆஜராகியுள்ளார்.
அக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ள, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் என்பவர் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் இவ்வாறு வாக்குமூலம் அளிப்பதற்காக வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.























