Header Logo
விளையாட்டு
74 ஆண்டு கால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்!

Sep 1, 2026 - 05:38 PM

74 ஆண்டு கால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்!
Mobitel Inner 1278

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆவது நாளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 36 வயதான முகமது அப்பாஸ், இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் தனது பெயரை கௌரவப் பலகையில் (Honours Board) பதிவு செய்துள்ளார். 

இப்போட்டியில் அவர் 130 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரே டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் ஆசிய பந்துவீச்சாளரின் இரண்டாவது சிறந்த பந்துவீச்சுப் பதிவாக இது அமைந்தது. இதற்கு முன்பு 2016 இல் பாகிஸ்தானின் யாசிர் ஷா 141 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பதிவாக உள்ளது. 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையின் மூலம் முகமது அப்பாஸ் 74 கால சாதனையை முறியடித்துள்ளார். 36 ஆண்டுகள் மற்றும் 173 நாட்களில் இந்த சாதனையை எட்டியதன் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிக மூத்த ஆசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

இதற்கு முன்பு 1952 இல் இந்திய வீரர் வினூ மன்கட் (36 ஆண்டுகள், 68 நாட்களில்) படைத்த சாதனையே முந்தைய சாதனையாக இருந்தது. 

லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு முறை 8 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் அவர் அடைந்துள்ளார் (2018 இல் 8/64 வீழ்த்தியிருந்தார்). 

உலக அளவில் அவுஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத், மேற்கிந்தியத் தீவுகளின் மால்கம் மார்ஷல் மற்றும் சார்லஸ் டர்னர் ஆகியோருக்குப் பிறகு இந்தச் சாதனையைச் செய்யும் நான்காவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

Mobitel 1278