Nov 23, 2026 - 12:13 PM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நுவரெலியா பிளாக்பூல் சந்தியிலிருந்து அம்பேவெல – பட்டிப்பொல – ஹோர்ட்டன் சமவெளி (B512) வீதியின் 19 கிலோமீற்றர் பகுதியை காபட் இட்டு புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த புனரமைப்புப் பணிகள் நேற்று (22) கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இவ்வீதிப் புனரமைப்புக்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 2,143.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட மக்களின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீதியில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் அம்பேவெல பண்ணை மற்றும் நியூசிலாந்து பண்ணை ஆகியவை அமைந்துள்ளன.
அத்துடன், அம்பேவெல புகையிரத நிலையமும் இவ்வீதிக்கு அண்மையில் அமைந்துள்ளதுடன், இந்த வீதியின் ஊடாக ஒஹிய புகையிரத நிலையத்தைச் சென்றடைவதற்கான குறுகிய வழியாகவும் இது விளங்குகின்றது.
































