Nov 23, 2026 - 10:17 AM

புதிய களனிப் பாலம் மற்றும் துறைமுக அணுகல் அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் பகுதியின் நிர்மாணப் பணிகள் காரணமாக, இங்குருகட இடைமாறல் வழியின் உள்நுழைதல் மற்றும் வெளியேறல் ஆகிய இரு பாதைகளும் மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
இன்று (23) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை குறித்த பாதைகள் இடைக்கிடையே மூடப்படவுள்ளன.
இதற்கமைய, குறித்த நாட்களில் இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரையான காலப்பகுதியில் இந்தப் போக்குவரத்துத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த நேரங்களில் இந்தப் பாதையைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
































