Nov 23, 2026 - 09:03 AM

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில், T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிளொன்றை வழிமறித்துச் சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
































