Nov 23, 2026 - 11:27 AM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலாந்த நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றின் முன்பக்கக் கதவுப் பூட்டை உடைத்து உள்நுழைந்துடன் வாகனங்களுக்குச் சேதம் விளைவித்த நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (22) இரவு குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகநபர், அங்கிருந்து மூன்று மதுபானப் போத்தல்களை எடுத்து சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், நுவரெலியா - உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில் பயணித்த வாகனங்களை இலக்கு வைத்து மதுபானப் போத்தல்களால் தாக்குதல் நடத்தியதுடன், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றின் முன்பக்கக் கண்ணாடியையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு உளவியல் ரீதியான பாதிப்புக்கள் காணப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, சந்தேகநபரை இன்று (23) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்காக அங்கொட தேசிய உளநல நிறுவகத்துக்கு அனுப்புவதற்கு நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
































