Header Logo
SLIC
செய்திகள்
புலமைப்பரிசில் பெறுபேறு - தேசிய ரீதியிலான முதலாம் இடம் விபரம்

Sep 2, 2026 - 06:10 PM

புலமைப்பரிசில் பெறுபேறு - தேசிய ரீதியிலான முதலாம் இடம் விபரம்
Mobitel Inner 1278
EDEX Inner

2026 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய, சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 (குருநாகல்) மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனைத் தெரிவித்தார். 

அத்துடன் தமிழ் மொழி மூலமாக அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே இந்த புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இம்முறை பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றினர். 

அதேபோல், இம்முறை அதிகூடிய வெட்டுப்புள்ளியாக 139 அமைந்துள்ளதுடன், பேறுகளுக்கு அமைய 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிக புள்ளிகளைப் பெற முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

கடந்த ஒகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இந்த பரீட்சைக்காக 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவாகியிருந்த நிலையில், அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

Mobitel 1278